ஆண்கள் இல்லாமல் நான் இல்லை... அரசியலுக்கு வர ஷகிலா விருப்பம்

Youtube Video

மக்களுக்கு நல்லது செய்யும் அரசியல் கட்சியில் இணைய விருப்பம் உள்ளதாக நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார்.

  • Share this:
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் நடித்து வருபவர் ஷகிலா.தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ள இவரது வாழ்க்கை ‘ஷகிலா’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. கன்னட இயக்குநர் இந்திரஜித் லோகேஷ் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் ரிச்சா சத்தா, பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நேரடியாக இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஷகிலா, தனது வாழ்க்கை முழுக்க பல்வேறு வலிகளை சொல்லும் வகையில் இந்தப் படம் அமைந்திருப்பதாக குறிப்பிட்டார். நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது குறித்த கேள்விக்கு,கோழைகள் மட்டுமே தற்கொலை செய்து கொள்வார்கள் என்றார் .

மேலும் படிக்க: ‘திரௌபதி’ இயக்குநரின் அடுத்த படத்தில் ஹீரோயினாகும் சீரியல் பிரபலம்

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் அரசியலுக்குள் வர விருப்பம் இருப்பதாகவும் யாராவது அழைத்தால் கட்சியில் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் குறிப்பிட்டார். பெண்களைப் பொறுத்தமட்டில் யாரையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்பதே நான் சொல்லும் அறிவுரை என்றார். ஆண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ஆண்கள் இல்லாமல் நான் இல்லை என்றார் ஷகிலா.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: