‘அருவா சண்ட’ படத்துக்கு டப்பிங் பேசும்போது கண் கலங்கினேன்' - சரண்யா பொன்வண்ணன்..

‘அருவா சண்ட’ படத்துக்கு டப்பிங் பேசும்போது கண் கலங்கினேன்' - சரண்யா பொன்வண்ணன்..

‘அருவா சண்ட’ பட ஸ்டில்

‘அருவா சண்ட’ படத்துக்கு டப்பிங் பேசும் போது தான் கண் கலங்கியதாக நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஒய்ட் ஸ்க்ரீன் புரொடக்‌ஷன் சார்பில் வி.ராஜா தயாரித்து நடிக்கும் படம் ‘அருவா சண்ட’. ஆதிராஜன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாதி ஆணவக் கொலைகளைப் பற்றிப் பேசும் வகையில் இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தரண் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

  ‘அருவா சண்ட’ படம் குறித்து சரண்யா பொன்வண்ணன் கூறுகையில், “என்னைப் போன்ற குணச்சித்திர நடிகைகளுக்கு இது போன்ற படம் அமைவது மிகவும் அரிது. சமீப காலங்களில் நான் கதை கேட்டவுடனே நடிக்க ஒப்புக்கொண்ட படம் இது மட்டும்தான். விஜய்சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுவபவத்தை இந்தப் படத்தில் உணர்ந்தேன். இதிலும் நாயகன் தம்பி வி.ராஜா புதிது. ஆனால் நடிப்பில் அப்படி தெரியவில்லை. சிறப்பாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருந்தார்.  இது ஒரு சிறந்த கதைக்களம். நான் படத்திற்கு டப்பிங் பேசும்போது கூட நான் என்னை அறியாமலே கண் கலங்கினேன் அப்படியொரு கிளைமாக்ஸ் காட்சிகள் படத்தில் உள்ளன. இது போன்ற சமூக அக்கறை கொண்ட படத்தை தைரியமாக தயாரித்து, எனக்கு மகனாக, கதை நாயகனாக நடித்துள்ள தம்பி வி.ராஜாவிற்கு வாழ்த்துகள்” என்றார்.

  சென்சார் அதிகாரிகளின் பாராட்டுக்களுடன் ‘யு’ சான்றிதழ் பெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
  Published by:Sheik Hanifah
  First published: