முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குடிபோதையில் தயாரிப்பாளரை தாக்கியதாக நிக்கி கல்ராணி தங்கை மீது புகார்...!

குடிபோதையில் தயாரிப்பாளரை தாக்கியதாக நிக்கி கல்ராணி தங்கை மீது புகார்...!

சஞ்சனா கல்ராணி

சஞ்சனா கல்ராணி

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

குடிபோதையில் தயாரிப்பாளரை தாக்கியதாக நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணியிடம் போலீஸ் விசாரணை நடத்தினர்.

பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி, கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார்.

அவ்வபோது சில தமிழ்ப் படங்களில் தலை காட்டும் இவர், தற்போது அருண் விஜயின் ‘பாக்சர்’ படத்திலும், விஜய் டிவி காமெடி நடிகர் ராமர் ஹீரோவாக நடிக்கும் ‘போடா முண்டம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இரவு நேர பார்ட்டி ஒன்றில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி போதையாகிய சஞ்சனா கல்ராணி, கன்னட சினிமா தயாரிப்பாளரை பீர் பாட்டிலால் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இரவு நேர மது விருந்தில் சஞ்சனா கல்ராணி, அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, போதையில் கன்னட தயாரிப்பாளர் வந்தனா ஜெயினிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இருவருக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சஞ்சனா தனது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் வந்தனாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சஞ்சனா கல்ராணி மீது வந்தனா ஜெயின் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் சஞ்சனாவிடம் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், வந்தனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உண்மை தான், ஆனால் அவரை பீர் பாட்டிலைக் கொண்டு தாக்கவில்லை, என்று சஞ்சனா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

Also see...

First published:

Tags: Nikki Galrani