முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரசவத்திற்கு பின் 105 கிலோ எடை... கொத்துக்கொத்தாக முடி உதிர்வு.. மனம் திறந்த நடிகை சமீரா

பிரசவத்திற்கு பின் 105 கிலோ எடை... கொத்துக்கொத்தாக முடி உதிர்வு.. மனம் திறந்த நடிகை சமீரா

நட்சத்திரங்களாக இருப்பவர்கள், குழந்தைகளுக்கென பிரத்யேகமாக நேரம் ஒதுக்குவதை ஒருபோதும் தவிர்க்க மாட்டார்கள். தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், லைப் ஸ்டைலை சரியாக கடைபிடிப்பது உள்ளிட்ட விஷயங்களை குழந்தைகளுடன் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வார்கள். குழந்தைகள் முடிவெடுப்பதை அனுமதிப்பார்கள். இதுபோன்ற இன்னும் நிறைய விஷயங்களை, அவர்களிடம் இருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

நட்சத்திரங்களாக இருப்பவர்கள், குழந்தைகளுக்கென பிரத்யேகமாக நேரம் ஒதுக்குவதை ஒருபோதும் தவிர்க்க மாட்டார்கள். தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், லைப் ஸ்டைலை சரியாக கடைபிடிப்பது உள்ளிட்ட விஷயங்களை குழந்தைகளுடன் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வார்கள். குழந்தைகள் முடிவெடுப்பதை அனுமதிப்பார்கள். இதுபோன்ற இன்னும் நிறைய விஷயங்களை, அவர்களிடம் இருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமீரா ரெட்டி தான் பிரசவத்திற்கு பிறகு மனதளவில் மற்றும் உடலளவில் பாதிக்கப்பட்டது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

  • Last Updated :

சமீரா ரெட்டி தனது முதல் மகன் ஹான்ஸ் பிறந்தபோது மகப்பேறுக்கு பிறகான மன அழுத்தத்துடன் எவ்வாறு போராடினார் என்பதை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். முதலில் தாய்மை குறித்த அவரது யோசனை பாலிவுட் பிரபலங்களால் ஈர்க்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரு சரியான உடல் வடிவமைப்பைக் கொண்ட பேஜ் 3 அம்மாக்களில் ஒருவராக இருப்பேன்" என்று அவர் ஆரம்பத்தில் நினைத்ததாக கூறியுள்ளார். ஆனால் அவர் பிரசவ நேரத்தில் 105 கிலோ எடையுடன் இருப்பேன் என்று நினைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஹ்யூமன்ஸ் ஆஃப் பம்பாயுடனான ஒரு உரையாடலில் சமீரா கூறியதாவது, தனது கணவர் அக்ஷய் வர்தே தான் முதல் குழந்தை ஹான்ஸை கவனித்துக்கொண்டதாக கூறினார். டயப்பர்களை மாற்றுவது முதல் மகனுக்கு உணவளிப்பது வரை அனைத்தையும் பார்த்துக் கொண்டார். முதல் குழந்தை பிறந்தபோது தன்னால் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியவில்லை என்பதை நினைத்து மிகவும் வேதனை அடைந்ததாகவும், அதே நேரத்தில் அவர் தனது உணர்ச்சிகளுடன் போராடியதாகவும் கூறினார்.

அந்த சமயத்தில் எனது மாமியார் என்னிடம், "உனக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது. ஆதரவான கணவர் இருக்கிறார். பின்பு எதற்காக வருத்தப்படுகிறாய்? என்று கேட்டார். அதற்கு என்னிடம் பதில் இல்லை. பிறகு நான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகும் ஹான்ஸை கவனித்துக் கொள்ள முடியாததை நினைத்து வருத்தப்பட்டு அழுதேன், கிட்டத்தட்ட ஒரு வருடம் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், இதனால் நான் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசிய அவர், "பிரசவத்திற்கு பிறகு 105 கிலோ எடை அதிகரித்ததோடு அலோபீசியா அரேட்டா (Alopecia areata) எனும் பிரச்சனையால் பாதிக்கப்பற்றிருந்தேன். என் தலையில் இருந்து முடி கொத்துக்கொத்தாக விழுந்தன, "என்று அவர் கூறினார்.

பின்னர் இதனை ஒரு ஆழ்ந்த பிரச்சனை என்று உணர்ந்த அவர், ஒரு மருத்துவரை அணுகி, அதிக எடையை குறைப்பதில் இருந்து ஒரு தொழில்துறையின் ஒரு பகுதியாக இருப்பது வரை தனது எல்லா பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்தார். மேலும் அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்தார். இறுதியில் ஒரு புதிய நபரை போல உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Sameera Reddy (@reddysameera)மேலும் பேசிய அவர் “சுமார் 2 வருடங்களுக்கு எல்லாவற்றில் இருந்தும் விலகியிருந்த நான் மீண்டும் சமூக ஊடகங்களில் சேர்ந்தேன். அப்போது எண்னிடம், "நீங்கள் ஒரு அற்புதமான அம்மாவாக இருக்கப் போகிறீர்களா அல்லது மீண்டும்‘ செக்ஸி சாம் ’ஆக இருப்பீர்களா?’ என்று கேட்பார்கள். ஆனால் அதிக அளவில் பின்தொடர்பவர்களைப் பெறுவதற்காக நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எனவே என் பிரச்சினைகளைப் பற்றி பேசத் தொடங்கினேன். அப்போது எனது தோற்றத்திற்காக அதிகம் ட்ரோல் செய்யப்பட்டேன். ஆனால் அது என்னைப் பாதிக்கவில்லை. மேலும் 2018 ஆம் ஆண்டில், இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்தபோது, முன்பு இருந்த பிரச்சனைகளை தனது வழியில் எதிர்த்து போராட முடிவெடுத்தார்.

தனது இரண்டாவது கர்ப்ப காலத்தில், சமீராவின் வயது 40. ஆனால் முதல் பிரசவத்தில் இழந்த எல்லாவற்றையும் செய்ய விரும்பினார். முக்கியமாக அந்த காலகட்டத்தில் மனநிலை மாற்றங்களை அனுபவிப்பதில் மிகவும் பாசிட்டிவாக இருந்தார். அவர் எட்டு மாத கர்ப்பமாக இருந்தபோது நீருக்கடியில் பிகினி படப்பிடிப்பு நடத்தினார். அதனை பார்த்த பல பெண் ரசிகைகள் தன்னை ஒரு உத்வேகம் என்று அணுகியதாக சமீரா கூறினார். மேலும் முதல் பிரவத்தின் போது சந்தித்த பிரச்சனைகள் எதுவும் இல்லாமல். சமீரா தனது மகள் நைராவை பெற்றெடுத்தார்.

நடிகை சமீரா சமீப காலமாக பெண்களுக்கு உதேவேகம் கொடுக்கும் வகையில் பல யோசனைகளையும், தான் சந்தித்த பிரச்சனைகளையும் பகிர்ந்து வருகிறார். சமீரா, அவரது கணவர் அக்ஷாய் மற்றும் அவர்களது குழந்தைகள், ஹான்ஸ் மற்றும் நைரா ஆகியோர் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மனம்தளராத அவர் தன்னையும் தன் குழந்தைகளையும் கொரோனாவில் இருந்து மீட்டெடுத்துள்ளார். இது தொடர்பாகவும் பதிவுகளை வெளியிட்டு மக்களுக்கு ஊக்கம் கொடுத்தார். மேலும், #ImperfectlyPerfect என்ற ஹேஷ்டேக்குடன் சுய-அன்பு மற்றும் ஏற்றுக்கொள்ளல் பற்றிய பதிவுகளை அவர் அடிக்கடி பகிர்ந்து கொண்டு வருகிறார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Sameera Reddy