• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், கரு கலைத்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.. மனம் திறந்த சமந்தா..

வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், கரு கலைத்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.. மனம் திறந்த சமந்தா..

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

எனக்கு குழந்தை வேண்டாம் என்றும், நான் கருகலைத்துள்ளேன் போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

  • Share this:
    நடிகை சமந்தா தமிழில் டாப் ஹீரோயின்கள் லிஸ்டில் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் சினிமாவில் நடித்த முதல் படம்’ விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பின்பு விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு ரிமேக்கில் ஜெஸி கதாபாத்திரத்தில் நடித்தார்.இவருக்கு ஜோடியாக நாக சைதன்யா நடித்திருந்தார். அதையடுத்து தமிழில் 'பாணா காத்தாடி' திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

    தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். 2013 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான மனம் திரைப்படத்தில் நாக சைதன்யாவுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருப்பார். பின்பு இருவரும் காதலித்து 2017 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா மெர்சல், இரும்புத்திரை, u turn, சூப்பர் டீலக்ஸ், ஓ பேபி ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு ஓ பேபி திரைப்படத்திற்கு பிறகு தமிழில் சமந்தா நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.



    also read : ’விவாகரத்து வலி மிகுந்தது.. மீள டைம் கொடுங்க..’ பரவும் வதந்திகளால் நடிகை சமந்தா வேதனை

    ஹிந்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘ தி பேமிலி மேன் 2’ வெப் சீரிஸில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பினை பலரும் பாராட்டினர்.இந்நிலையில் நடிகை சமந்தா திடீரேன தனது சமூக வலைதள பக்கத்தில் ‘ அக்கினேனி’ என்ற பெயரை நீக்கிவிட்டார்.இதனால் சமந்தா மற்றும் நாக சைதன்யாவிற்கு விவாகரத்து ஆக உள்ளதாக செய்திகள் தீயாய் பரவின. இந்த செய்திகள் குறித்து எந்த ஒரு விளக்கமும் இருவரும் அளிக்கவில்லை.ரசிகர்களும் இது ஒரு வதந்தியாக முடிந்துவிடும் என்ற எதிர்பார்த்த நிலையில்,அக்டோபர் 2 ஆம் தேதி சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே தங்கள் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்தனர். இதனை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும் சமந்தாவிற்கு ஆதரவாகவே குரல் கொடுத்தனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Samantha (@samantharuthprabhuoffl)





    இந்நிலையில் நடிகை சமந்தா நாக சைதன்யாவுடனான தனது விவாகரத்து வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.இந்நிலையில் நடிகை சமந்தா விவாகரத்து குறித்து மீண்டும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் ‘ என் மீது அக்கறை காட்டுபவர்களுக்கும் என்னை பற்றி வரும் வதந்திகளை எதிர்த்து நிற்பவர்களுக்கும் நன்றி. நான் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறேன், எனக்கு குழந்தை வேண்டாம் என்றும், நான் கருகலைத்துள்ளேன் போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். விவாகரத்து என்பதே வலிமிகுந்தது. நான் இதிலிருந்து மீண்டு வர நேரம் தேவைப்படுகிறது. என் மீதான இந்த தனிப்பட்ட தாக்குதல்கள் தொடரத்தான் செய்யும். ஆனால், இதனை இனியும் அனுமதிக்கமாட்டேன். அவர்கள் கூறும் எதுவும் என்னை உடைக்காது என்பதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.


    சமந்தாவின் இந்த போஸ்ட் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.நடிகை சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன் , விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல இரண்டு காதல் ‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: