ருத்ராட்ச மாலை அணிந்து சத்குருவுடன் அமர்ந்திருக்கும் சமந்தா

ருத்ராட்ச மாலை அணிந்து சத்குருவுடன் அமர்ந்திருக்கும் சமந்தா

நடிகை சமந்தா

சத்குருவை சந்தித்த நடிகை சமந்தா அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சத்குருவை சந்தித்த நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் அதைப்பற்றி எழுதியுள்ளார். சமந்தா கூறியிருப்பதாவது, “ஆன்மீக செயல்முறையின் முழு பயிற்சி என்பது நீங்கள் உங்களுக்குள் வரையப்பட்ட எல்லைகளை உடைத்து மகத்தான அனுபவத்தை அனுபவிப்பதே ஆகும். ஆன்மீகத்தின் நோக்கம் என்பது உங்கள் அறியாமையின் விளைவாக நீங்கள் உருவாக்கி வரையறுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து உங்களை நீங்களே உருவாக்கிக் கொண்டு வாழ்வது தான். இது ஆனந்தமான ஒரு எல்லையற்ற பொறுப்பு.

அறிவு மட்டும் சாதனை அல்ல. உங்களது புலன்கள் அனைத்து ஒரு வெளிப்புற தோற்றத்தை தருகின்றன. ஆனால் உண்மையான வெளிப்புறத்தை நீங்கள் ஒருபோதும் அனுபவித்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணரும் போது நீங்கள் உண்மையாகவே அறிவு ஒளியை பெற்றுள்ளீர்கள் என்று அர்த்தம்” இவ்வாறு நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.




முன்னதாக சத்குருவை சந்தித்த நடிகை அமலாபால், ““என் வாழ்க்கை ஒரு முழு வட்டத்துக்குள் வந்துவிட்டது. ஆன்மீகத்தின் சிறந்த தொடக்கம்.

நான் முதல்முறையாக 19 வயதில் ஈஷா யோகா மையத்துக்கு வந்தேன். அப்போது 3 கேள்விகள் கேட்க எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் எனது அனைத்து கேள்விகளுக்கு தான் யோகா செய்வதாக சத்குரு பதிலளித்தார். அந்த வார்த்தைகளின் வலிமை எனக்கு அப்போது தெரியவில்லை.

மேலும் படிக்க: நமீதா கிணற்றுக்குள் விழுவதைப் பார்த்து பதறிப்போன மக்கள்

அவரது கருத்துகளை நான் ஒருவேளை ஏற்றுக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் நான் எவ்வளவு மாற்றம் பெற்றிருப்பேன். சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு நான் அவரை சந்தித்தேன். என் வாழ்க்கை ஒரு முழுவட்டத்திற்கு வந்துவிட்டது என நினைக்கிறேன். இது நனவான வாழ்க்கை மற்றும் ஆன்மீகத்தின் சிறந்த தொடக்கம்” இவ்வாறு நடிகை அமலாபால் கூறியிருந்தார்.
Published by:Sheik Hanifah
First published: