Home /News /entertainment /

96 படம் தெலுங்கில் ரீமேக் செய்யக்கூடாது: என்ன சொல்கிறார் சமந்தா?

96 படம் தெலுங்கில் ரீமேக் செய்யக்கூடாது: என்ன சொல்கிறார் சமந்தா?

த்ரிஷா மற்றும் சமந்தா

த்ரிஷா மற்றும் சமந்தா

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கு நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

    விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ திரைப்படம் அண்மையில் தமிழில் வெளியான மிகச்சிறந்த காதல் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. படம் பார்க்கும் ரசிகர்களை தங்கள் பள்ளி கால நினைவுகளுக்கே அழைத்து போகும். இந்தப் படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் இசையமைத்துள்ளார்.

    96 படத்தில் த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி


    1996-ல் ஒன்றாக பள்ளியில் படித்த விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிகின்றனர். 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ரீ-யூனியனில் மறுபடியும் சந்திக்கும் அவர்களின் வாழ்வில் ஓர் இரவு முழுவதும் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் இந்த 96 படம்.

    த்ரிஷா, நானி மற்றும் சமந்தா


    தமிழில் வெற்றியடைந்த இந்தப் படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது. தெலுங்கில் நான் ஈ புகழ் நானி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், த்ரிஷா கதாபாத்திரத்தில் அவரே நடிப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

    இந்நிலையில் தற்போது த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் ட்விட்டரில் கேட்டதற்கு 96 படம் ரீமேக் செய்யக்கூடாது என்று பதிலளித்துள்ளார்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: 96 movie, 96 telugu remake, Actress Samantha, Actress Trisha

    அடுத்த செய்தி