முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு திரையுலகினர் பலரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ‘அவள்’ பட இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கும் ‘நெற்றிக்கண்’ டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கும் நடிகை சமந்தா, “பிறந்தநாள் வாழ்த்துகள் நயன்தாரா. தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டே இருங்கள். நமக்கானதற்காக சண்டையிட வேண்டும் என்பதற்காக எங்களுக்கு ஊக்கமளியுங்கள். உங்களுடைய வலிமைக்கும் அமைதியான உறுதிக்கும் வணக்கங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Happy birthday to the one and only Nayanthara💓.. Keep shining brighter and brighter and inspiring us to fight for what is ours .More power to you ✊sister.. Salute your strength and silent determination 🙏 #HBDNayantharapic.twitter.com/uwhOpj2FVU
நெற்றிக்கண் திரைப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, மலையாளத்தில் ‘நிழல்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவும், சமந்தாவும் முதல்முறையாக இணைந்து நடிக்கின்றனர். நாயகனாக விஜய் சேதுபதி நடிக்க அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.