"என்னை அசிங்கப்படுத்தினார்கள்"... மனம் திறந்த 'பிக்பாஸ்' சாக்ஷி!

நடிகை சாக்‌ஷி

நடிப்புக்கு இடையே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் குஷிப்படுத்தி வருகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பள்ளிப்பருவத்தில் பல்வேறு அசிங்கங்களை எதிர்கொண்டதாக பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை சாக்ஷி விஸ்வாசம் மற்றும் காலா திரைப்படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்துள்ள அரண்மனை 3 படம் வெளியாக உள்ளது. நடிப்புக்கு இடையே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் குஷிப்படுத்தி வருகிறார். அவரின் சமீபத்திய கவர்ச்சிப் படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தற்போது, தன்னுடைய பிட்னஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், மஞ்சள் உடையில் ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். அந்த புகைப்படத்துக்கு கீழே தன்னுடைய பழைய நினைவுகளையும், சோஷியல் மெசேஜ் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதாவது, பள்ளிப்பருவத்தில் குண்டாக இருந்ததால் தோழிகள் அசிங்கப்படுத்தியதாகவும், அழகாக இல்லை எனக் கூறி தன்னை கேலி செய்ததாக கூறியுள்ளார். தன்னை எந்த பையனும் விரும்பமாட்டான் என அவர்கள் கூறியது மன வருத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ள சாக்ஷி, அதில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Also read... போலி செய்தி பரப்பப்படுகிறது - ஹன்சிகா பட இயக்குனர் விளக்கம்!

அகத்தின் அழகு மட்டுமே நிலையானது எனக் கூறியுள்ள அவர், தனக்கு இப்போது நிறைய புரப்போசல்கள் வருவதாக கூறியுள்ளார். யாரையும் உதாசீனப்படுத்தாதீர்கள் என்றும் சாக்ஷி அகர்வால் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், "‘’நான் பள்ளியில் படித்தபோது தோழிகள் சிலர், என்னைப் பார்த்து நீ குண்டாகவும் அசிங்கமாகவும் இருக்கிறாய். எந்த பையனும் உன்னை விரும்ப மாட்டான். மற்ற பெண்களும் உன்னுடன் நட்பாக பழக விரும்ப மாட்டார்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் இப்போது தினமும் என்னை பிடிப்பதாக சொல்லி ஏகப்பட்ட கடிதங்கள் வருகிறது.

ஒருவருக்கு மன அழகுதான் முக்கியம். அது நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. எனவே யாரையும் இழிவுப்படுத்த வேண்டாம். பள்ளி, கல்லூரி, பணியிடங்கள் எதுவாக இருந்தாலும் யாரையும் குறைவாக மதிப்பிட்டு பேச வேண்டாம். ஒவ்வொரு தனிமனிதனும் இந்த பிரபஞ்சத்தில் அவரவர் சொந்த வழியில் அழகானவர்களாகத்தான் இருக்கிறார்கள். என்னை நிபந்தனையில்லாமல் நேசிப்பவர்களுக்கும் எனக்காக இருப்பதற்காகவும் நன்றி. நீங்கள்தான் எனது பெரிய பலம். எப்போதும் நேர்மறையாக இருங்கள். கடினமாக உழையுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதை நீங்களே செய்யுங்கள். உங்கள் வலியை சக்தியாக மாற்றவும்’’ என தன்னுடைய பழைய நினைவுகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

சிண்ரெல்லா மற்றும் தி நைட் ஆகிய திரைப்படங்களிலும் சாக்ஷி அகர்வால் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். அந்த படங்களும் விரைவில் திரைக்கு வரவுள்ளன. அண்மையில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான டெடி திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால், இந்தப் படம் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: