ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நான் பெண்களை தான் சைட் அடிப்பேன்: சாய் பல்லவி ஓபன் டாக்!

நான் பெண்களை தான் சைட் அடிப்பேன்: சாய் பல்லவி ஓபன் டாக்!

நடிகை சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி

பார்த்தவுடன் காதல் என்பதில் பெரிதாக நம்பிக்கை இல்லை, அதே நேரத்தில் ஆண்களை விட, பெண்களை தான் அதிகம் சைட் அடிப்பேன் என்றும் சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  நான் பெண்களை தான் அதிகமாக சைட் அடிப்பேன் என்று நடிகை சாய் பல்லவி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

  தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் முன்னனி நடிகையாக உள்ளார்.

  மலையாளத்தில் இவர் நடித்த பிரேமம் படத்தின் மூலம் மலையாள திரை ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.

  தமிழ், தெலுங்கு என்று முன்னனி நடிகர்களுக்கு நாயகியாக நடிக்க ஆரம்பித்தார் சாய் பல்லவி. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் NGk படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார்.

  வரும் 31-ம் தேதி NGk படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் வேலையில் படக்குழு தீவிரமாக உள்ளது.

  செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பார்த்தவுடன் காதலில் நம்பிக்கை இருக்கிறதா? என்று சாய் பல்லவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

  அதற்கு பதிலளித்த நடிகை அவர், பார்த்தவுடன் காதல் என்பதில் பெரிதாக நம்பிக்கை இல்லை, அதே நேரத்தில் ஆண்களைவிட, பெண்களை தான் அதிகம் சைட் அடிப்பேன், அதாவது, அவர்கள் அணிந்திருக்கும் உடை, சிகை அலங்காரம் போன்ற விஷயத்தை பார்ப்பேன்.

  மேலும், வித்தியாச வித்தியாசமாக பெண்கள் உடை அணிந்திருப்பதை அதிகமாக கவனிப்பேன்’ என்றும் சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Actress sai pallavi, NGK