Actress Roja: நடிகை ரோஜாவிற்கு இவ்வளவு பெரிய மகளா? ஃபேமிலி வீடியோ, ஃபோட்டோவை வைரலாக்கி வரும் ரசிகர்கள்!

நடிகை ரோஜா

கடந்த 1972- ஆண்டு நவம்பர் 17 அன்று நாகராஜா ரெட்டி மற்றும் லலிதா தம்பதியருக்கு மகளாக ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் பிறந்தார்.

  • Share this:
1990-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், நடிகர் பிரசாந்திற்கு ஜோடியாக செம்பருத்தி என்ற படத்தில் தமிழ்த்திரை உலகில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். இவரது உண்மை பெயர் ஸ்ரீ லதா ரெட்டி. திரைப்படங்களில் நடிப்பதற்கு வசதியாக தனது பெயரை ரோஜா என்று மாற்றி கொண்டார். இவர் கடந்த 1972- ஆண்டு நவம்பர் 17 அன்று நாகராஜா ரெட்டி மற்றும் லலிதா தம்பதியருக்கு மகளாக ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் பிறந்தார்.

இவருக்கு குமாரசாமி ரெட்டி மற்றும் ராமபிரசாத் ரெட்டி என்ற உடன்பிறந்த இரு சகோதரர்கள் உள்ளனர். இவரது குடும்பம் ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்த நிலையில், நடிகை ரோஜா திருப்பதி ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் (Political Science) இளங்கலை பட்டம் பெற்றார். திரைத்துறையில் நுழைவதற்கு முன் நடிகை ரோஜா குச்சிபுடி நடனத்தில் தேர்ச்சி பெற்று டான்சராக இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முழுவதும் திருப்பதியில் வைத்து ஷூட் செய்யப்பட்ட பிரேமா தபசு என்ற தெலுங்கு படத்தில் நடித்து வெள்ளித்திரையில் நுழைந்த நடிகை ரோஜா, பின்னர் 1992-ல் செம்பருத்தி படத்தில் நடித்தார். பின்னர் அதனை தொடர்ந்து சரத்குமாருடன் இணைந்து சூரியன் படத்தில் நடித்தார். தொடர்ந்து இரு படங்களும் ஹிட் ஆனதால் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் உழைப்பாளி படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதன் பிறகு அதிரடிப்படை, இந்து, வீரா, சரிகமபத நீ, ராசய்யா, மக்களாட்சி, ஆயுதபூஜை, பரம்பரை உட்பட பல படங்களில் பிரபல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.தன்னை தமிழ்த்திரை துறையில் அறிமுகம் செய்த இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து வந்த ரோஜா கடந்த 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று அவரையே திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். திரைத்துறையில் வெற்றிகரமாக திகழ்ந்ததை போலவே ஆந்திர மாநில அரசியலிலும் கால் பதித்து வெற்றிகரமான அரசியல்வாதியாக உள்ளார். 1999-ல் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்த இவர் அக்கட்சியின் தெலுங்கு மஹிலா பிரிவு தலைவராக இருந்தார்.பின் 2009-ல் Yuvajana Sramika Rythu Congress கட்சியில் சேர்ந்தார். 2014 பொதுத் தேர்தலில், நகரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். கடந்த 2019 தேர்தலிலும் நகரியில் வெற்றி பெற்று தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். திரைத்துறையை தொடர்ந்து அரசியலில் இறங்கி கலக்கி வரும் ரோஜாவிற்கு அனுஷாமாலிகா, கிருஷ்ணா என்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே ரோஜா தனது மகன் கிருஷ்ணா மற்றும் மகள் அனுஷாமாலிகா மற்றும் கணவர் செல்வமணி ஆகியோருடன் சமீபத்தில் எடுத்து கொண்ட குடும்ப வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

Also read... Vijay Television: விஜய் டிவி-யின் புத்தம் புது சீரியலில் ஜோடி சேரும் சின்னத்திரை ஸ்டார்கள் - ரசிகர்கள் ஆவல்!

இதில் பல ஆண்டுகளுக்கு முன் சிறு குழந்தைகளாக ரசிகர்கள் பார்த்த கிருஷ்ணா மற்றும் அனுஷாமாலிகா இருவரும் நன்றாக வளர்ந்து காணப்படுகின்றனர். நடிகை ரோஜாவின் மகன் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடி உள்ளார். பிறந்தநாள் நிகழ்வுகள் அடங்கிய வீடியோ மற்றும் போட்டோவை ரோஜாவின் தீவிர ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாக்கி வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: