Home /News /entertainment /

தன்னை விமர்சித்த நெட்டிசனுக்கு ரித்விகா காட்டமான பதிலடி!

தன்னை விமர்சித்த நெட்டிசனுக்கு ரித்விகா காட்டமான பதிலடி!

நடிகை ரித்விகா

நடிகை ரித்விகா

சமூகவலைதளத்தில் தன்னை விமர்சித்த நெட்டிசனுக்கு நடிகை ரித்விகா காட்டமாக பதிலளித்துள்ளார்.

பரதேசி, மெட்ராஸ், ஒருநாள் கூத்து உள்ளிட்ட படங்களில் நடித்த ரித்விகா கடந்த 2018-ம் ஆண்டு பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியாளரானார். அந்நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களைப் பெற்ற ரித்விகா, பின்னர் டார்ச் லைட், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, வால்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர் சமூகவலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.

அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வரும் ரித்விகா, கடந்த மாதம் 28-ம் தேதி கருப்பு வெள்ளையில் ஜிம்மில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர், “ஐயோ பாவம் படவாய்ப்பு இல்லாம வெட்டியா இருக்காங்க” என்று கமெண்ட் பதிவிட்டுள்ளார். இந்தக் கருத்தைப் பார்த்து கோபமடைந்த ரித்விகா, நடுவிரலை உயர்த்திக் காட்டி, காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.



 




View this post on Instagram




 

If nothing changes, nothing changes. When our mindset changes, everything can change #blackandwhite @brigadefitness


A post shared by Riythvika Kp (@riythvika_official) on






ரித்விகாவின் இந்த பதிலுக்கு அவரைப் பின் தொடரும் பலரும், ஆதரவாகவும், எதிராகவும் கருத்து பதிவிட்டுள்ளனர். நடிகை ரித்விகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2 லட்சத்து 89 ஆயிரம் பேர் பின் தொடர்வதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு திடீர் ரத்து?
Published by:Sheik Hanifah
First published:

Tags: Rithvika

அடுத்த செய்தி