முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / என் வாழ்க்கையில் நான் செய்த தவறு திருமணம் தான் - நடிகை ரேவதி

என் வாழ்க்கையில் நான் செய்த தவறு திருமணம் தான் - நடிகை ரேவதி

நடிகை ரேவதி

நடிகை ரேவதி

  • Last Updated :

திருமணம் செய்தது தவறான முடிவு என்று நடிகை ரேவதி கூறியுள்ளார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி. மண் வாசனை படம் மூலம் அறிமுகமான ரேவதி நடிப்பில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டார். விவகாரத்துக்கு பின் மீண்டும் நடிக்க வந்த ரேவதி தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது திருமணம் குறித்து விகடன் இதழுக்கு பேட்டியளித்திருக்கும் அவர் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவுகளில் முக்கியமானது திருமணம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது, “நான் 12-ம் வகுப்பு முடித்திருந்த நேரம். என்னைப் பற்றி தெரிந்து கொண்ட இயக்குநர் பாரதிராஜா மண்வாசனை படத்தில் நடிக்கக் கேட்டார். அந்த வயதில் நான் நடிகையா என்று பயந்துபோய் வேண்டாம் என்று சொன்னேன். என்னுடைய மாமாதான் என்னை நடிக்க சம்மதம் தெரிவிக்க வைத்தார்.

புகைப்படங்களைப் பார்க்க கிளிக் செய்க - ரம்யா பாண்டியனின் கேன்டிட் போட்டோஸை வெளியிட்ட புகைப்பட கலைஞர்!

அப்போது எனக்கு நடிக்கவே தெரியாது என்று பாரதிராஜாவிடம் கூறினேன். உன்னை நடிக்க வைப்பது என்னுடைய பொறுப்பு என்றார். அவர் சொல்லிக் கொடுப்பதை நிதானமாக கவனித்து நடித்தேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவுகளில் ஒன்று எனது திருமணம். கொஞ்சம் நிதானமாக முடிவெடுத்திருந்தால் எனது சினிமா பாதை வேறுமாதிரி இருந்திருக்கும். இன்னும் நிறைய நல்ல படங்களில் நடித்திருப்பேன்.

இப்போது சில ஆண்டுகளாக நல்ல கதாபாத்திரங்கள் வருகின்றன.” என்று ரேவதி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: கதை அமைந்தால் அஜித் போல நடிப்பேன்: ஜி.வி. பிரகாஷ்

top videos

    First published:

    Tags: Actress Revathi