2002-ல் ரஜினிக்கு ஜூஸ் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்த பிரபல நடிகையின் மகள்!

திருமண வாழ்க்கைக்கு பின் சிறிது காலம் திரைத்துறையை விட்டு விலகி இருந்த நடிகை ரேகா, தமிழில் ரோஜா கூட்டம் திரைப்படம் மூலம் ரீ என்ட?

 • Share this:
  தமிழ் திரையுலகில் 1980-களில் ஹீரோயினாக நடித்துப் புகழ் பெற்றவர் நடிகை ரேகா. இவரது இயற்பெயர் சுமதி ஜோஸ்பின். 1968-ஆம் ஆண்டு மே மாதம் கேரளாவில் பிறந்த இவர் ஊட்டியில் கல்வி பயின்றுள்ளார். நடிகையாக வேண்டும் என்ற ஆசையுடன் சென்னை வந்த ரேகா 1986-ம் ஆண்டு வெளியான பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் திரைப்படத்தில் அறிமுகமாகி ஜெனிஃபர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்து இன்று வரை ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். அதன் பின்னர் புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, எங்க ஊரு பாட்டுக்காரன், பாட்டுக்கு நான் அடிமை, புரியாத புதிர் உள்ளிட்ட பல தமிழ் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  பெரும்பாலான திரைப்படங்களில் சென்டிமென்ட் மற்றும் அழுகை கலந்த ஹோம்லி ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள திரைத்துறையில் பணியாற்றி வந்தாலும் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 1989-ல் வெளியான தசரதம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருது வாங்கி உள்ளார். திருமண வாழ்க்கைக்கு பின் சிறிது காலம் திரைத்துறையை விட்டு விலகி இருந்த நடிகை ரேகா, தமிழில் ரோஜா கூட்டம் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

  Also Read : சன்னி லியோனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் செம்பன் வினோத்!

  பின்னர் சகோதரி மற்றும் தாய் மற்றும் குணசித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அன்பு, கோவில், காதல் சடுகுடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குக்கு வித் கோமாளி மூலம் விஜய் டிவி-க்கு வந்த ரேகா பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக பங்கேற்றார். இந்நிலையில் நடிகை ரேகா சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் நடிகர் ரஜினிக்கு குழந்தை ஒன்று ஜூஸ் கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றை ஷேர் செய்தார்.

  கூடவே கேப்ஷனில் அந்த குழந்தை யார் எப்போது இந்த போட்டோ எடுக்கப்பட்டது என்ற தகவலையும் ஷேர் செய்திருந்தார். ரஜினி கடந்த 2002-ம் ஆண்டு காவிரியில் இருந்து நீர் திறக்க கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். ரஜினி தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் திரைத்துறையை சேர்ந்த ஏராளமான நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 9 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் ரஜினி.   
  View this post on Instagram

   

  A post shared by Rekha Harris (@rekhaharris)


  இந்த உண்ணாவிரதத்தை நடிகர் ரஜினி முடித்து கொண்ட போது நடிகை ரேகாவின் மகள் தன ரஜினிக்கு ஜூஸ் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்துள்ளார். இத்தகவலை போட்டோவுடன் ஷேர் செய்து கொண்டுள்ள நடிகை ரேகா இந்த சிறப்பு தருணத்தை நினைவூட்டும் போட்டோவை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு Rajinifield l_2k kids-க்கு நன்றி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் காவிரி பிரச்சினையில் தனது 9 மணிநேர உண்ணாவிரதத்தை முடித்த போது, என் மகள் கொடுத்த ஒரு கிளாஸ் ஜூஸைப் அருந்தினார். அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபராகவும், ஒரு நல்ல காரணத்தின் ஒரு பகுதியாகவும் என் மகள் ஆசீர்வதிக்கப்பட்டாள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Vijay R
  First published: