ஆடையில்லாத போட்டோவை பதிவிட்டு ட்விஸ்ட் வைத்த நடிகை ரெஜினா

ஆடையில்லாத போட்டோவை பதிவிட்டு ட்விஸ்ட் வைத்த நடிகை ரெஜினா

நடிகை ரெஜினா

நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் சமூகவலைதள பதிவை வைத்து நெட்டிசன்கள் மீம் உருவாக்கி கிண்டலடித்து வருகின்றனர்.

  • Share this:
கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரெஜினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து கவர்ச்சியாக களமிறங்கிய ரெஜினா தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்திருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்ரா உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

டிசம்பர் 13-ம் தேதி தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ரெஜினாவுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தனது புதிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரெஜினா கசாண்ட்ரா, “உங்களது வாழ்த்துகளுக்கும், ஆசிர்வாதங்களுக்கும் நன்றி. இவை அனைத்தும் இந்த உலகம் எனக்கானது என்பதைக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

புகைப்படத்தின் கீழே அடுத்த பக்கத்தில் எனது ஆடையில்லா புகைப்படம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் புகைப்படத்தின் அடுத்த பக்கத்துக்கு நகர்த்த, அதில் ஆடையில்லாத ரெஜினா கசாண்ட்ராவின் அழகிய புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த போட்டோக்கள் அனைத்தும் ரெஜினா குழந்தையாக இருந்த போது எடுக்கப்பட்டவை. 
View this post on Instagram

 

A post shared by Regina Cassandra (@reginaacassandraa)


ரெஜினாவின் இந்த பதிவை வைத்து மீம் உருவாக்கி கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள். அதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் ரெஜினா பகிர்ந்திருக்கிறார்.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: