• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் மகனுடன் ஜோடியாக நடிக்க ஆசை! நடிகையின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

விஜய் மகனுடன் ஜோடியாக நடிக்க ஆசை! நடிகையின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

ரவீனா தாஹா

ரவீனா தாஹா

கேமராவுக்கு முன் நடிக்க இருந்தால், இப்போதே தான் தயாராக இருப்பதாக இளம் நடிகை ரவீனா தாகா கூறியுள்ளார்

  • Share this:
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுவதாக இளம் நடிகை ரவீனா தாகா கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் வசூல் மன்னனாக இருப்பவர் நடிகர் விஜய். அவருக்கான மாஸே குறையாத நிலையில், அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் திரையுலகிற்குள் எப்போது நுழையப் போகிறார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே ஜேசன் சஞ்சய், தந்தை விஜய்யுடன் நடனமாடி திரையுலக பிரவேசத்தை தொடங்கிவிட்டார் என்றாலும், ஹீரோவாக களமிறங்கும் நாளை விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக ஜேசன் சஞ்சய் சினிமா துறை சார்ந்த படிப்பை படித்து வருகிறார். இதனால், கட்டாயம் தமிழ் திரையுலகுக்கு வருவார் என்றாலும், கேமராவுக்கு முன்பா? அல்லது கேமராவுக்கு பின்னா? என்ற கேள்வி இருந்து வருகிறது. மாஸ்டர் படத்தை தயாரித்த பிரிட்டோ பேசும்போது, ஜேசன் திரைப்படத்துறைக்கு வருவார் என்றும், அவர் கேமராவுக்கு முன்பு இருப்பதை விட பின் இருப்பதையே அதிகம் விரும்புகிறார் என்றும் கூறியிருந்தார். ஆனால், கேமராவுக்கு முன் நடிக்க இருந்தால், இப்போதே தான் தயாராக இருப்பதாக இளம் நடிகை ரவீனா தாகா கூறியுள்ளார். 19 வயதான இளம் நடிகை ரவீனா, ஜில்லா, ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மௌனராகம் என்ற நாடகத்திலும் நடித்து வருகிறார்.

சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் அவர், திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், ஹீரோயினாக வேண்டும் என்பது விருப்பம் என தெரிவித்துள்ளார். யாருடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? என்ற கேள்வி பதில் அளித்துள்ள அவர், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உடன் ஜோடியாக நடிக்க தனக்கு விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடித்தால், அவருடன் ஜோடியாக நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். திரைத்துறைக்குள் நுழையாததற்கு முன்பே விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு ஜோடி சேருவதற்கு இளம் கதாநாயகிகள் தயாராக இருப்பது விஜய் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயகத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

முதல் கட்டப் படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நிறைவடைந்துள்ளது. விறுவிறுப்பாக படப்பிடிப்பை நிறைவு செய்து பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சூட்டிங் தடை பட்டுள்ளது. இதனால், அடுத்த தமிழ் புத்தாண்டுக்கு இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்க உள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: