Home /News /entertainment /

விஜய் படத்தில் நானா? உண்மையை வெளியிட்ட ராஷ்மிகா!

விஜய் படத்தில் நானா? உண்மையை வெளியிட்ட ராஷ்மிகா!

நடிகர் விஜய் | ராஷ்மிகா மந்தனா

நடிகர் விஜய் | ராஷ்மிகா மந்தனா

உங்கள் அனைவருடைய ஆதரவும் இருந்தால் தமிழில் அறிமுக நாயகியாக விரைவில் நடிப்பேன் என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
விஜய் நடிக்கும் 63-வது படத்தில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், இந்த தகவல் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார்.

சர்கார் படத்தை அடுத்து விஜய், இயக்குநர் அட்லியுடன் 3 -வது முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அதேபோல் சிம்டாங்காரன் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார். மெர்சல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே. விஷ்ணு இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்தப் படம் 2019-ம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பது என்ற கேள்விக்கு படக்குழு இன்னும் பதிலளிக்கவில்லை. இருந்தபோதும் சமந்தா, நயன்தாரா, காஜல் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இந்தப் பட்டியலில் கீதா கோவிந்தம் பட நாயகி ராஷ்மிகா மந்தனாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

மேலும் ராஷ்மிகா மந்தனாதான் விஜய்யின் அடுத்தப்பட ஹீரோயின் என்று தமிழ் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராஷ்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில், " நான் விஜய் மற்றும் அட்லி சார் படத்தில் நடிக்க போவதாக நிறையபேர் என்னிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதுவரை அதுபோல் ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் அவர்களுடன் சேர்ந்து கூடிய விரைவில் படம் பண்ணுவேன் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. இதேபோல் உங்கள் அனைவருடைய ஆதரவும் இருந்தால் தமிழில் அறிமுக நாயகியாக விரைவில் நடிப்பேன். என்மேல் அன்பு வைத்திருக்கும் என் ரசிகர்களுக்கு நன்றி”.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.



மேலும் ராஷ்மிகாவின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள ரசிகர்கள், நடிகர் விஜய்யின் பாணியிலேயே “ we are waiting ” என்று பதிலளித்துள்ளனர்.















இதேபோல், நடிகர் விஜய்யின் 63-ஆவது படத்தில் ரஷ்மிகா  நடிக்கவுள்ளார் என்று அவரது ரசிகர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, “டேய் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடாதே டா” என நகைச்சுவையாக  கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Also See... செல்ஃபி எடுக்க வெட்கப்படும் ‘இங்கேம்’ அழகி ராஷ்மிகா - கலர்ஃபுல் புகைப்படங்கள்

Published by:Vaijayanthi S
First published:

Tags: Actor vijay, Actress Rashmika Mandanna, Thalapathy 63

அடுத்த செய்தி