• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • முன்னணி நடிகருடன் தமிழில் அறிமுகமாகும் ராஷ்மிகா!

முன்னணி நடிகருடன் தமிழில் அறிமுகமாகும் ராஷ்மிகா!

நடிகை ராஷி கண்ணா

நடிகை ராஷி கண்ணா

விஜய் 63 படம் மூலம் தமிழில் ராஷ்மிகா மந்தனா அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கார்த்தி நடிக்கும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார்.

    நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான தேவ் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்தப் படத்தை அடுத்து சிவகார்த்திகேயனின் ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. கார்த்தியும், பாக்கியராஜ் கண்ணனும் கூட்டணி அமைக்கும் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அடங்க மறு படத்தில் நடித்த ராஷி கண்ணா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கதாநாயகியாக நடிப்பதற்கு ராஷ்மிகா மண்டானா ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலம் பிரபலமடைந்தவர்.



    விஜய் 63 படம் மூலம் தமிழில் ராஷ்மிகா மந்தனா அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கார்த்தி நடிக்கும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் படத்தைத் தொடர்ந்து மாநகரம் படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்திலும் நடிக்க கார்த்தி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். திரில்லர் கதைக்களம் கொண்ட இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார்.

    நையாண்டி நாயகர்களின் அரசியல் பேச்சு - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: