• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தளபதி 64: மீண்டும் பட்டியலில் இணைந்த ராஷ்மிகா!

தளபதி 64: மீண்டும் பட்டியலில் இணைந்த ராஷ்மிகா!

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

  • News18
  • Last Updated :
  • Share this:
    விஜய்யின் 64-வது படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார் இயக்குநர் அட்லீ. தளபதி 63 என்ற தற்காலிக டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசைக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். படம் தொடங்கும் போதே தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விஜய்யின் 64 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தயாரிப்பு மேற்பார்வையாளராக லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பணிபுரியவுள்ளனர்.

    இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கீதா கோவிந்தம் பட நாயகி ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



    முன்னதாக விஜய்யின் 63-வது படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அப்போது ரசிகர்களுக்கு ட்விட்டரில் பதிலளித்த ராஷ்மிகா, விரைவில் விஜய் படத்தில் இணைந்து பணியாற்றுவேன் என்று தெரிவித்திருந்தார்.

    தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.



    வீடியோ பார்க்க: விஜய்-ன் வழிக்கு வந்த அஜித்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: