Home /News /entertainment /

‘அருவா’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷிகண்ணா!

‘அருவா’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷிகண்ணா!

ராஷிகண்ணா | சூர்யா

ராஷிகண்ணா | சூர்யா

‘அருவா’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் டி.இமான், சூர்யாவுடனும், ஹரியுடனும் முதல்முறையாக இணைகிறார்.

     'அருவா'  திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பதை நடிகை ராஷிகண்ணா உறுதிப்படுத்தியுள்ளார்.

    சூர்யாவின் 39-வது படத்தை விஸ்வாசம் பட இயக்குநர் சிவா இயக்குவதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால் சிவா ரஜினிகாந்தின் அண்ணாத்த பட வேலைகளில் பிஸியானார். அதேபோல் சூர்யா - சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வந்தார்.

    இதையடுத்து சூர்யாவின் 39-வது படத்தை இயக்குநர் ஹரி இயக்க இருப்பதாகவும், இத்திரைப்படத்துக்கு அருவா என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் கடந்த மார்ச் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    சூர்யா - இயக்குநர் ஹரி இணையும் 6-வது படமாக அருவா உருவாக இருக்கும் நிலையில், இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ராஷிகண்ணா நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. ட்விட்டரில் #askraashi என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ராஷிகண்ணா, அரண்மனை 3 மற்றும் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் தான் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



    இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் டி.இமான், சூர்யாவுடனும், ஹரியுடனும் முதல்முறையாக இணைகிறார். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி ஒரேகட்டமாக படப்பிடிப்பை முடித்து 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Surya

    அடுத்த செய்தி