• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ‘என்னைபோல் சிங்கிளாக இருந்தால்....!’: பிக் பாஸ் ரம்யா பாண்டியன் காதலர் தின பஞ்ச் மெசேஜ்

‘என்னைபோல் சிங்கிளாக இருந்தால்....!’: பிக் பாஸ் ரம்யா பாண்டியன் காதலர் தின பஞ்ச் மெசேஜ்

 ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன்

“இந்த தினத்தன்று நான் சொல்ல வேண்டும் என ஆசைப்படுவது இதுதான் நாம் ரசிக்க வேண்டிய விஷயத்திற்கு நம் பங்களிப்பை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் அது சிறியதாக இருக்கலாம் நம்மால் முடிந்ததாக இருக்கலாம் பால்கனியில் செடிகளை வைக்கலாம்  மாடியில் ஒரு செடி வளர்க்களாம் இல்ல இது போல் மரம் நட்டு வைத்து சமுதாயத்திற்கும் இயற்கைக்கும் மிகப் பெரிய பங்களிப்பாக இது இருக்கும் என நினைக்கிறேன்”

  • Share this:
என்னைபோல் சிங்கிளாக இருந்தால் இயற்கையோடு அதிக அன்பை காட்டுங்கள் என நடிகை ரம்யா பாண்டியன் தனது சிங்கிள் ஸ்டேட்டசை வெளிப்படுத்தியுள்ளார்.

காதலர் தினநாளில் சமுதாயத்திற்கும் இயற்கைக்கும் அன்பை காட்டுங்கள் நீங்கள் காதலர்களாக இருந்தால் உங்கள் காதலுக்கு அன்பை காட்டுங்கள் என்னைபோல் சிங்கிளாக இருந்தால் இயற்கையோடு அதிக அன்பைகாட்டுங்கள் என நடிகை ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ராஜு முருகனின் இயக்கத்தில் வெளிவந்த ஜோக்கர் படத்தில் நடித்திருந்தாலும் மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் இளசுகளின் கவனத்தை பெற்று அதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து, இன்று அந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பேசப்படும் நடிகையாக மாறியிருப்பவர் ரம்யா பாண்டியன்.

காதலர் தின நாளில் 143 மரக்கன்று வைத்து  குறும்காடு அமைக்கும் பணிக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், கோ க்ரீன் ரோட்டரி சங்கம் மற்றும் கம்மியூணி ட்ரீ அமைப்புடன் சேர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். மேலும் அங்குள்ள உள்ளூர் பொதுமக்களுடன் சேர்ந்து மரக்கன்று நட்டுவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ரம்யா பாண்டியன்


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரம்யா பாண்டியனை கௌரவிக்கும் விதமாக FALL IN LOVE WITH TREES என்னும் வாசகம் அடங்கிய ரம்யா பாண்டியன் ஓவியத்தை இயற்கை ஆர்வலர்கள் அன்பளிப்பாக அளித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகை ரம்யா பாண்டியனை   உள்ளூர்வாசி ஒருவர் என்னிடம் சொல்லாமல் ஏன்? என்ன நடக்கிறது முதலில் என்னிடம் கூறுங்கள் என ரகளையில் ஈடுபட்டார்.

இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது ஒருவழியாக அவரை சமாளித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அந்த நிகழ்ச்சிக்கு லுங்கியுடன் வந்தவரை சிறப்பு விருந்தினர் பட்டியலில் சேர்த்து வரிசையில் நிற்க வைத்ததும் அமைதியானார்.அவர்களோடு சிரிப்புடன் பேசிய ரம்யா பாண்டியன் புன்னகை முகத்தோடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விரைந்து வெளியேறினர்.

பின்னர் ரம்யா பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்த போது,

ரம்யா பாண்டியன்


“காதலர் தினம் எல்லோருக்கும் எல்லாரையும் பிடித்து இருந்தாலும் இந்த தினத்தன்று அதை வார்த்தை மூலமும் சைகை மூலமாகவும் அதை நாம் வெளிப்படுத்துவோம் எனக்கு எப்பொழுதும் இயற்கை மிகவும் பிடிக்கும் அதனால் இன்று ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இயற்கை ஆர்வலர்களிடம் சேர்ந்து 143 மரக்கன்றுகளை வைப்பதற்கு திட்டமிட்டு அதை இன்று அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் AIEMA கொடுத்த இடத்தில் இந்த மரக்கன்றுகளை நடுவதற்கு வந்ததாகவும் மேலும் இயற்கையை பிடிக்காதவர்கள் யாருமில்லை எல்லோரும் ரசிப்போம் நமக்கும் இருக்கும் நாம் அதற்கான பங்களிப்பை நாம் செலுத்தவேண்டும் என்றால் அது மிகக் குறைவாக இருக்கிறது இல்லாமலும் இருக்கிறது.



இந்த தினத்தன்று நான் சொல்ல வேண்டும் என ஆசைப்படுவது இதுதான் நாம் ரசிக்க வேண்டிய விஷயத்திற்கு நம் பங்களிப்பை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் அது சிறியதாக இருக்கலாம் நம்மால் முடிந்ததாக இருக்கலாம் பால்கனியில் செடிகளை வைக்கலாம்  மாடியில் ஒரு செடி வளர்க்களாம் இல்ல இது போல் மரம் நட்டு வைத்து சமுதாயத்திற்கும் இயற்கைக்கும் மிகப் பெரிய பங்களிப்பாக இது இருக்கும் என நினைக்கிறேன் என கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: