• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • த்ரிஷாவை அடுத்து ரகுல் ப்ரீத் சிங்கிடம் கைவரிசை காட்டிய ஹேக்கர்கள்!

த்ரிஷாவை அடுத்து ரகுல் ப்ரீத் சிங்கிடம் கைவரிசை காட்டிய ஹேக்கர்கள்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங்

நடிகை ரகுல் ப்ரீத் சிங்

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.

    சூர்யா நடிக்கும் என்.ஜி.கே மற்றும் கார்த்தி நடிக்கும் தேவ் ஆகிய படங்களில் பிஸியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். மேலும் இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும் நடித்துவருகிறார். இதுதவிர தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    புகைப்படங்கள், படம் குறித்த தகவல் ஆகியவற்றை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் அவர், தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அந்தப் பதிவில், “எனது இன்ஸ்டகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. எனவே எனது கணக்கிலிருந்து வரும் எந்த மெசேஜிற்கும் கணக்கு மீட்டெடுக்கப்படும் வரை பதிலளிக்க வேண்டாம். நன்றி” எனக் கூறியுள்ளார். முன்னதாக இதே போல் நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: