நடிகை வயிற்றில் சுமப்பது எனது குழந்தைதான்! - யூடியூப் பிரபலம் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

ராக்கி சாவந்த்

  • News18
  • Last Updated :
  • Share this:
லண்டன் தொழிலதிபரை மணமுடித்த நடிகையின் வயிற்றில் இருப்பது எனது குழந்தைதான் என்று யூடியூப் பிரபலம் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழில் என் சகியே, முத்திரை உள்ளிட்ட படங்களில் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியவர் நடிகை ராக்கி சாவந்த். தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கும் லண்டன் வாழ் இந்தியரான ரித்தேஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றதாக நடிகை ராக்கி சாவந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும் அந்த பேட்டியில், "நான் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர். ரித்தேஷ் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர், இந்துமதம். அவருடனான பழக்கம் ஏற்பட்ட பிறகு நான் அவருடைய மனைவியாக வேண்டும் என்று இயேசுவிடம் வேண்டிக் கொண்டேன். அவர், டொனால்ட் டிரம்பின் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிகிறார்.

நான் ஐட்டம் பாடல்களுக்கு நடிப்பதால் என்னுடைய திருமணச் செய்தியை அறிந்தால் எனக்கு வாய்ப்பு அளிப்பார்களா என அஞ்சினேன். அதனால் தான் என் திருமணச் செய்தியை ரகசியமாக வைத்திருந்தேன். எங்களுக்குக் குழந்தை பிறந்தபிறகு குழந்தைகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றார். அவர் ஊடகங்களைச் சந்திக்க தயாராக இருப்பார்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் தனக்கு திருமணமான புகைப்படங்களை அவர் எந்த சமூகவலைதளத்திலும் வெளியிடவில்லை. இதனால் ராக்கி சாவந்துக்கு இன்னும் திருமணமே நடைபெறவில்லை என்றும் விளம்பரத்துக்காக அவர் இவ்வாறு கூறி வருவதாகவும் பாலிவுட் திரையுலகில் சிலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவரும் ராக்கி சாவந்தின் முன்னாள் காதலர் என்று கூறப்பட்டவருமான தீபக் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ராக்கி சாவந்துக்கு திருமணம் ஆகவில்லை என்றும், ஆனால் அவர் தற்போது 2 மாத கர்பிணியாக இருக்கிறார் என்றும், அவருடைய வயிற்றில் இருப்பது என்னுடைய குழந்தை என்றும் கூறியுள்ளார். தீபக் கலால் இப்படி கூறியிருப்பது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பார்க்க: சாட்டையால் பலமாக தாக்கிக்கொண்ட சல்மான் கான்

Published by:Sheik Hanifah
First published: