• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தனுஷின் அடுத்த படத்திலும் மலையாள ஹீரோயின்!

தனுஷின் அடுத்த படத்திலும் மலையாள ஹீரோயின்!

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

  • Share this:
    தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் தனுஷ் அடுத்ததாக பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நடிகை ரெஜிஷா விஜயன் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சின்னத்திரை தொகுப்பாளினியாக பணியாற்றிய நடிகை ரெஜிஷா விஜயன், 2016-ம் ஆண்டு அனுராகா கரிக்கின் வெல்லம் என்ற படத்தில் எலிசபெத் எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். நடித்த முதல் படத்தில் கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். அடுத்தடுத்து கடந்த ஆண்டு மட்டும் 3 படங்களில் நடித்து வந்த இவர் தற்போது தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.



    கடந்த ஆண்டு வெளியான அசுரன் படத்தில் மலையாள முன்னணி நடிகை மஞ்சுவாரியர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனுஷுடன் ஜோடி சேர்ந்தார். அந்த வகையில் மூன்றாவது முறையாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க: தனது ஆடி காரை சேதப்படுத்தியதாக ஸ்ரீரெட்டி போலீசில் புகார்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: