மீண்டும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவான நடிகை ரைசா வில்சனின் வீடியோ ஒன்று வைரல்..

ரைசா வில்சன்

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரைசா, கூடைப்பந்து விளையாடும் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

  • Share this:
மாடலிங் துறையில் இருந்து பின்னர் தமிழ் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ரைசா வில்சன். இவர் தமிழில் வேலையில்லா பட்டதாரி 2ல் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரைசா, கூடைப்பந்து விளையாடும் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் கூடைப்பந்து விளையாட தெரியுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ரைசா முகத்திற்கு பேசியல் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கண்ணுக்கு கீழ் வீங்கி பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது முகம் அசிங்கமாக காணப்பட்டதையடுத்து அதனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். மேலும் அதில் தனது அழகு கலை மருத்துவர் செய்த தவறால் இந்த விபரீதம் ஏற்பட்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

Also Read: ’அட்டகாசம் அச்சுமா’ - முன்னணி பண்பலையில் RJ-வாக பிக் பாஸ் அர்ச்சனா!

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து ரூ. 1 கோடி நஷ்டஈடு கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் டாக்டர் பைரவி செந்திலுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் சிகிச்சைக்கு ஒப்புக்கொள்வதாகத் தானாக முன்வந்து ரைசா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார், எனவே தன்னிடம் மூன்று நாட்களில் ரைசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டாக்டர் பைரவி ரைசாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இருவரும் மாறி மாறி குறை கூறி வந்த நிலையில், சமீபத்தில் ரைசா ஷேர் செய்த புகைப்படம் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதில் அவரது கண்ணுக்கு கீழ் இருந்த வீக்கம் முற்றிலும் குணமடைந்து அவரது முகம் பொலிவாகவும் காணப்பட்டது. அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அழகாக இருப்பதாக கமண்ட்ஸ் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து உள்ளாடை போடாமல் சட்டை பட்டனை திறந்துவாறு ஒரு வீடியோ, மற்றும் புகைப்படத்தை ரைசா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இந்த புகைப்படம், வீடியோ வைரலான நிலையில், அவருக்கு எதிராக பலரும் கருத்துக்கள் தெரிவித்திருந்தனர். எனினும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்த  புகைப்படத்தை லைக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson)

மேலும் தனது முதல் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட புகைப்படத்தையும் ரைசா ஷேர் செய்திருந்தார். கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு திரை பிரபலங்களும் தடுப்பூசி போட்டு கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: