• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மீண்டும் பழைய அழகை பெற்ற நடிகை ரைசா வில்சன்- வைரலாகும் புகைப்படம்

மீண்டும் பழைய அழகை பெற்ற நடிகை ரைசா வில்சன்- வைரலாகும் புகைப்படம்

ரைசா வில்சன்

ரைசா வில்சன்

நடிகை ரைசா ஷேர் செய்துள்ள புகைப்படம் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

  • Share this:
மாடலிங் துறையில் இருந்து பின்னர்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ரைசா வில்சன். இவர் தமிழில் வேலையில்லா பட்டதாரி 2ல் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ரைசாவின் முகத்தில் பேசியல் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கண்ணுக்கு கீழ் வீங்கி பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது முகம் காயம்பட்டதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். மேலும் அதில் தனது அழகு கலை மருத்துவர் செய்த தவறால் இந்த விபரீதம் ஏற்பட்டிருந்ததாகவும், தற்போது அவர் வெளியூர் சென்றிருப்பதால் அவரை பார்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அதிற்சியடைந்தனர். ஏராளமானோர் அவரது நிலையை விமர்சித்தாலும், பலர் அவருக்கு ஆதரவாகவும் இருந்தனர் . இதனை தொடர்ந்து ரூ. 1 கோடி நஷ்டஈடு கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் டாக்டர் பைரவி செந்திலுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் சிகிச்சைக்கு ஒப்புக்கொள்வதாகத் தானாக முன்வந்து ரைசா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார், எனவே தன்னிடம் மூன்று நாட்களில் ரைசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டாக்டர் பைரவி ரைசாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

AlsoRead:’’எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை'’இப்பவும் என்னை புன்னகைக்க வைக்கிறார் கி.ரா - நடிகை பிரியா பவானி ஷங்கர் ட்விட்!

மேலும் ரைசாவிற்கு ஏற்பட்டுள்ளது பயப்படக்கூடிய பக்க விளைவுகள் இல்லை. அரிதாக ஏற்படக்கூடிய விளைவுதான். இயற்கையாகவே குணமடையக்கூடிய ஒன்று என்றும் அவர் கூறியிருந்தார். திடீரென சிகிச்சை குறித்து உண்மைக்குப் புறம்பான அவதூறான கருத்துகளை ரைசா வெளியிட்டு வருகிறார். இதனால் மற்ற வாடிக்கையாளர்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை சீர்குலையும் வகையில் ரைசா நடந்து விட்டார் என்றும் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து மூன்று நாட்களில் ரைசா எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்பதுடன் அதை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் ரைசா மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று அவரும் பேட்டியளித்தார்.

 இருவரும் மாறி மாறி குறை கூறி வந்த நிலையில், தற்போது ரைசா ஷேர் செய்துள்ள புகைப்படம் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. நடிகை ரைசா ட்விட்டரில் அவரது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவரது கண்ணுக்கு கீழ் இருந்த வீக்கம் முற்றிலும் குணமடைந்துள்ளது. மேலும் அவரது முகம் பொலிவாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் அவரது பாதிப்பு குணமடைந்துள்ளதை காணமுடிகிறது. மேலும் அழகாக இருப்பதாக அவரது ரசிகர்களும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். டாக்டர் பைரவி கூறியது போல அவரது சருமம் குணமடைந்து விட்டதால் ரைசா தனது வழக்கை திரும்ப பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: