Home /News /entertainment /

முரட்டு சிங்கிளுக்கு ஜோடியான பிக்பாஸ் ரைஸா!

முரட்டு சிங்கிளுக்கு ஜோடியான பிக்பாஸ் ரைஸா!

ரைஸா

ரைஸா

பெங்களூரில் வேலை பார்க்கும் முரட்டு சிங்கிளான ஹீரோ தனது சொந்த ஊருக்கு காரில் பயணிக்கிறார். அந்தப் பயணத்தின்போது அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் ரைஸா வில்சன் நடிக்கிறார்.

    2017-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் ரைஸா வில்சன். பின்னர் அவர்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் சகபோட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்தது. இந்தப் படத்தை அடுத்து யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் ஆலிஸ் (Alice) என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ரைஸா ஒப்பந்தமாகியுள்ளார்.



    இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்குகிறார். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கிறார். மேலும் செந்தில், ஆனந்தராஜ், ராமர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. படத்துக்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, சிவா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.



    படம் குறித்து நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் இயக்குநர் கமல் பிரகாஷ், பேண்டஸி உடன் காதல், காமெடி கலந்து இந்தப் படம் உருவாகும். படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞராக நடிக்கிறார். பெங்களூரில் வேலை பார்க்கும் முரட்டு சிங்கிளான ஹீரோ தனது சொந்த ஊருக்கு காரில் பயணிக்கிறார். அந்தப் பயணத்தின்போது அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கதை முழுவதும் ஒரே இரவில் நடந்து முடிவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

    Photos: 2 ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்யும் சிம்பு!

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actress Raiza, Bigg Boss, G.V.Prakash

    அடுத்த செய்தி