பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ரைஸா...காதலை சொன்ன சென்ராயன்...

news18
Updated: August 10, 2018, 6:55 PM IST
பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ரைஸா...காதலை சொன்ன சென்ராயன்...
ரைஸா வில்சன்
news18
Updated: August 10, 2018, 6:55 PM IST
பிக்பாஸ் வீட்டிற்கு நடிகை ரைஸா வில்சன், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஜுன் மாதத்திலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த முறை போன்றே இம்முறையும் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் இதுவரை மமதி, ஷாரிக், அனந்த் வைத்தியநாதன், நித்யா உள்ளிட்ட 5 பேர் வெளியாகியுள்ளனர். தொடக்கத்தில் நிகழ்ச்சியை பார்த்த கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பவர்கள் போலியாக நடித்து வருவதாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளின் மூலமாக ஒவ்வொருவரின் உண்மை முகமும் வெளிவரத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று வெளியாகியிருக்கும் புரமோ வீடியோவில் கடந்த முறை பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்த ரைஸா தோன்றியுள்ளார். அவரிடம் தனது காதலை தனக்கே உரிய பாணியில் காதலை சொல்கிறார் சென்ராயன். இன்று ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைஸா வில்சன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...