படம் பார்த்தா அழுக வரணும்! அப்படி எதும் படம் இருக்கா ? ரசிகர்களிடம் கேட்ட ரைசா..

படம் பார்த்தா அழுக வரணும்! அப்படி எதும் படம் இருக்கா ? ரசிகர்களிடம் கேட்ட ரைசா..

நடிகை ரைசா வில்சன்

என்னை அழ வைக்குற மாதிரி படம் ஏதாவது இருக்கா என கேட்டு நடிகை ரைசா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றவர் ரைசா வில்சன். இந்த போட்டியில் ஹரிஷ் கல்யாண், ஆரவ், ஓவியா உள்ளிட்ட பிரபலங்களும் இருந்தனர்.  போட்டியிலிருந்து வெளியே வந்த பிறகு பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணும், ரைசாவும் சேர்ந்து நடித்தனர். இந்த படம் இருவருக்குமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

  அதைத் தொடர்ந்து ஆலீஸ், காதலிக்க யாருமில்லை, தி சேஸ், FIR, ஹேஸ்டேக் லவ் ஆகிய நான்கு படங்களில் ரைசா பிசியாக நடித்து வருகிறார். ‘தி சேஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரைசா ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். ஒரு த்ரில்லர் படமாக தி சேஸ் திரைப்படம் உருவாகிறது என்பது புகைப்படங்களின் மூலம்  திட்டவட்டமாக தெரிந்தது. இந்த படங்கள் ஒன்றன் பின்பு ஒன்றாக இந்த ஆண்டு வெளியாகாலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் ஆக்டிவாக இருப்பவர் ரைசா. அதே போல் தான் எடுக்கும் போட்டோ ஷூட்களையும் தவறாமல் பகிர்ந்துவிடுவார்.

  இந்நிலையில் மிகவும் போர் அடிக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லிகிறார் நடிகை ரைசா. அது என்னவென்றால் ‘என்ன அழ வைக்குற படம் பார்க்கணும் போல இருக்கு. உங்களுக்கு தெரிஞ்ச மூவி சொல்லுங்க’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

   


  இதற்கு ரசிகர்களும் தங்களுக்கு தெரிஞ்ச திரைப்படங்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: