மார்க்கெட் ராஜா ராஜா எம்பிபிஎஸ் படக்குழுவினர் நடிகை ராதிகாவுக்கு நடிகவேள் செல்வி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளனர்.
காதல் மன்னன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அமர்க்களம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய சரண் கடைசியாக ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கியிருந்தார். வினய் நடித்திருந்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் சரண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். ஆரவ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், காவ்யா தாப்பர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சுரபி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் சரத்குமார், ஆர்.கே.செல்வமணி, நாசர், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், ரோகிணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ள ராதிகா சரத்குமாருக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பட்டத்துடன் இணைத்து நடிகவேள் செல்வி எனும் பட்டத்தை ராதிகா சரத்குமாருக்கு வழங்கி கவுரவித்தனர்.
ராதிகா சரத்குமார் பேசுகையில், என் தந்தையை கௌரவித்ததற்கு நன்றி. நான் முதலில் நடிக்க வரும் போது நான் எம்.ஆர்.ராதாவின் மகள் என்று பாரதிராஜாவுக்குத் தெரியாது. அது தெரிந்தபோது என் அப்பா துப்பாக்கி எடுத்து சுட்டு விடுவாரோ என்று பாரதிராஜா மிகவும் பயப்பட்டார். முதன் முதலில் பாரதிராஜா படத்தில் நடித்த போது மேக்கப்பை தொட்டு என் தொழில் உன்னிடம் இருக்கட்டும் என என்னை ஆசிர்வதித்தார். அவரது ஆசிர்வாதம்தான் என்னை இந்த இடத்தில் சேர்த்திருக்கிறது. அவருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
வீடியோ பார்க்க: எந்த அடிப்படையில் பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி?
Published by:Sheik Hanifah
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.