Home /News /entertainment /

நயன்தாரா ஏன் லேடி சூப்பர் ஸ்டார்?: ராதிகா விளக்கம்

நயன்தாரா ஏன் லேடி சூப்பர் ஸ்டார்?: ராதிகா விளக்கம்

நடிகை நயன்தாரா மற்றும் சரத்குமார்

நடிகை நயன்தாரா மற்றும் சரத்குமார்

தைரியமாகவும் தனித்துவமாகவும் படங்களை தேர்வு செய்வதால் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கலாம் என நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
    தைரியமாகவும் தனித்துவமாகவும் படங்களைத் தேர்வு செய்வதால் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கலாம் என நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.

    இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா படத்திற்கு இசையமைக்கிறார்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே படப்பிடிப்பின் போது நயன்தாரா, ராதிகா சரத்குமார், சிவகார்த்திகேயன் மூவரும் இணைந்து செல்ஃபி எடுத்துள்ளனர். அதை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தனது ட்விட்டர் பதிவில் நயன்தாராவை அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.



    ராதிகாவின் இந்த ட்விட்டர் பதிவைக் கண்ட ரசிகர் ஒருவர், நீங்கள் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அடைமொழி கொடுத்து அழைப்பதை ஏற்க முடியவில்லை. எங்களுக்கு 80-களில் வாழ்ந்த நடிகைகள் தான் சூப்பர்ஸ்டார்கள். அத்துடன் அது முடிந்துவிட்டது. அதற்குப் பின் சூப்பர் ஸ்டார்கள் இல்லை என்று கூறியுள்ளார்.

    இதற்கு பதிலளித்த ராதிகா சரத்குமார், “நன்றி. நிலையில்லாத சினிமாவில் நயன்தாரா தனது வெற்றியை தக்கவைத்துள்ளார். பலரும் தேர்ந்தெடுக்காத பாதையை தைரியமாகவும் தனித்துவமாகவும் அவர் தேர்வு செய்து வருகிறார். அதனால் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கலாம்” என்று கூறியுள்ளார்.

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Lady superstar, Nayanthara, Radhika sarathkumar, Sivakarthikeyan

    அடுத்த செய்தி