’விஜய் 63’ படத்தின் ஹீரோயின் நானா? ராஷ்மிகா மந்தனா ட்வீட்

விஜய் நடிக்கும் 63-வது படத்தில, ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், இந்த தகவல் குறித்து அவர் பதிலளித்திருக்கிறார்.

’விஜய் 63’ படத்தின் ஹீரோயின் நானா? ராஷ்மிகா மந்தனா ட்வீட்
நடிகர் விஜய் | ராஷ்மிகா மந்தனா
  • News18
  • Last Updated: November 17, 2018, 1:08 PM IST
  • Share this:
விஜய் நடிக்கும் 63-வது படத்தில, ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், இந்த தகவல் குறித்து அவர் பதிலளித்திருக்கிறார்.

சர்கார் படத்தை அடுத்து விஜய், இயக்குநர் அட்லியுடன் 3 -வது முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கபட்டுள்ளன. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அதேபோல் சிம்டாங்காரன் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார். மெர்சல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்தப் படம் 2019-ம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பது என்ற கேள்விக்கு படக்குழு இன்னும் பதிலளிக்கவில்லை. இருந்தபோதும் சமந்தா, நயன்தாரா, காஜல் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இந்தப் பட்டியலில் கீதா கோவிந்தம் பட நாயகி ராஷ்மிகா மந்தனாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.






இதுகுறித்து ட்விட்டரில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ராஷ்மிகா மந்தனா பதிலளித்திருக்கிறார். அதில், “டேய் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடாதே டா” என நகைச்சுவையாக  கூறியுள்ளார்.



விஜய் 63 படத்துக்கான படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் படத்தில் நடிக்க இருக்கும் ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கோலிவுட்டில் என்ன நடக்கிறது? தெரிஞ்சுக்க கிளிக் செய்க

News18 Tamil App - செய்திகளை நியூஸ்18 தமிழ் ஆப் வழியாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

First published: November 17, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading