’’எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை'’இப்பவும் என்னை புன்னகைக்க வைக்கிறார் கி.ரா - நடிகை பிரியா பவானி ஷங்கர் ட்விட்!

ப்ரியா பவானி சங்கர்

சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருதை பெற்றவர் சுருக்கமாக கி.ரா என்றழைக்கப்படும் மறைந்த கி.ராஜநாரயணன்.

  • Share this:
முதுபெரும் தமிழ் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் நேற்று வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவு காரணமாக இந்த பூவுலகை விட்டு மறைந்தார். இவரின் மறைவிற்கு நடிகை பிரியா பவானி ஷங்கர் எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை என்று இரங்கல் தெரிவித்து ட்விட் பதிவிட்டுள்ளார். சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருதை பெற்றவர் சுருக்கமாக கி.ரா என்றழைக்கப்படும் மறைந்த கி.ராஜநாராயணன். 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கியம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களை அங்கீகரித்து இவ்விருது வழங்கப்படுகிறது.

99 வயதான கி.ராஜநாராயணன் புதுச்சேரி லாஸ்ப்பேட்டையில் இருக்கும் அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். தனக்கு ஏற்பட்டிருந்த உடல்நலக் குறைவு காரணமாக புதுவையில் தான் வசித்து வந்த வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கி.ராஜநாராயணன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சாகித்ய அகாடமி விருது தவிர தமிழக அரசின் விருது மற்றும் கனடா நாட்டின் உயரிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும், பாராட்டையும் பெற்றுள்ளார். இவர் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கை, ஏமாற்றங்கள், வாழ்க்கைப்பாடுகளை தன் அழகிய எழுத்தால் கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர் உள்ளிட்ட பல `நாவல்கள் மூலம் விவரித்தார்.

எனவே "கரிசல் இலக்கியத்தின் தந்தை"யாக இவர் கருதப்படுகிறார். கடந்த 1923-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி கோவில்பட்டி அருகே இடைச்செவல் என்ற கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு ஐந்தாவது குழந்தையாக பிறந்தார் கி.ரா.இவர் ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், குறு நாவல்களை எழுதியுள்ளார். தனது கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்காக 1991-ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதை பெற்றார். எழுத்தாளர் என்ற முறையில் தன் மண் மற்றும் மக்களை இலக்கியமாக்கியதோடு நிற்காமல் இடதுசாரி இயக்கங்களுடன் சேர்ந்து பணியாற்றினார்.

விவசாய சங்கங்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார். தமிழ் எழுத்துலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கி.ராவின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு என்று வாசகர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் தகளது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

 


இவரது மறைவிற்கு நடிகை பிரியா பவானி ஷங்கர் ஸ்மைலியுடன் "எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை"என்று தலைப்பிட்டு கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார். " கி.ராஜநாரயணன், தமிழ் பேசினா fine கட்டனும்னு class leader-அ பெயர் எழுத சொல்ற school-ல, we are trained and tamed to think in English for 14 long years.

அப்படி ஒரு வாழ்க்கைமுறையில் ஒரு private librarian பரிந்துரையில் ‘கோபல்ல கிராமம்’ மூலம் அறிமுகமானவர் தான் கி.ரா, அப்புறம் 14,15 வயதில், ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ அப்படிங்கற பேர் நம்மல impress பண்ண, ஒரு குறுகுறுப்புடன் அதை librarian கிட்ட வச்ச என்னை நினைச்சா எனக்கே சில சமயம் (எமோஜி) இப்படி இருக்கும். அதன் வழி கி்.ரா இன்னும் பரிச்சயமாகிறார். அவருடைய சிறுகதைகள் நான் வாழாத உலகத்தை மனசுல பதியவச்சுது. எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை. இப்பவும் என்னை புன்னகைக்க வைக்கிறார். நிறைவான வாழ்க்கை" என்று தன் நினைவலைகளை பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகை நடிகை பிரியா பவானி ஷங்கர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: