• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Priya Prince: சின்னத்திரை பிரபலம் பிரியா பிரின்ஸ்-க்கு 16 வயது மகளா? பிறந்தநாள் கியூட் புகைப்படங்கள்!

Priya Prince: சின்னத்திரை பிரபலம் பிரியா பிரின்ஸ்-க்கு 16 வயது மகளா? பிறந்தநாள் கியூட் புகைப்படங்கள்!

நடிகை பிரியா பிரின்ஸ்

நடிகை பிரியா பிரின்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான இ.எம்.ஐ தவணை முறை வாழ்க்கை என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார்.

  • Share this:
சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நடிகை பிரியா பிரின்ஸ், தனது மகளின் 16 வது பிறந்தநாளை சூப்பராக கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த பிரியா பிரின்ஸ், படிப்பை நிறைவு செய்தவுடன் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான இ.எம்.ஐ தவணை முறை வாழ்க்கை  சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய  அவருக்கு பல்வேறு சீரியல்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'தமிழ் கடவுள் முருகன்' சீரியலில் பார்வதியாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இந்த சீரியலில் நடிப்பதற்காக அவர் 3 முறை ஆடிசனில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

தரமான கதாபாத்திரம் என்பதால் 5 கிலோ எடையை குறைத்து நடித்துள்ளார். அவரின் உழைப்புக்கு ஏற்ப மக்களிடமும் நல்ல ரீச் கிடைத்தது. அதன் பின்னர், கண்ணாண கண்ணே, பொன்மகள் வந்தால், மாப்பிள்ளை, கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

Also Read:   Coco Cola vs Ronaldo: பெவிக்காலின் அட்டகாச விளம்பரம்..!

தொடர்ச்சியான வாய்ப்புகள் வர, அவருடைய புகழும் வெளித்திரை வரை பரவியது. இதனால், இயக்குநர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்தில் நடித்தார். சூர்யாவின் பசங்க 2 படத்திலும் நடித்த அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான Mr & Mrs ரியாலிட்டி ஷோவிலும் கணவருடன் கலந்து கொண்டார்.

Also Read:   இந்திய தபால் துறையின் மாதாந்திர வருமான திட்டத்தின் 5 முக்கிய அம்சங்கள்

சீரியல் மட்டுமல்லாது சமூகவலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். தனக்கென ஒரு யூ-டியூப் சேனலை வைத்துள்ள அவர், அதில் அழகு குறிப்புகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவருடைய ஸ்டைல், பியூட்டி டிப்ஸூக்கு யூ டியூப்பில் தனி ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது. இந்நிலையில், 16 வயதில் அவருக்கு மகள் ஒருவர் இருக்கிறார். அவரின் பிறந்தநாளை வீட்டில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடிய பிரியா பிரின்ஸ், அந்த மகிழ்ச்சியான தருணங்களின் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார்.

நடிகை பிரியா பிரின்ஸ்


பிரியா பிரின்ஸின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ள நெட்டிசன்கள், கூடவே வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். பார்ப்பதற்கும் மிகவும் இளமையாக இருக்கும் உங்களுக்கு 16 வயதில் மகள் இருக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ள இணையவாசிகள், எங்களால் நம்பவே முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் முத்திரை பதித்தவர்கள் பலபேர் உள்ளனர். பாத்திமா பாபு, பிரியா பவானி சங்கர், அனிதா சம்பத், நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா உள்ளிட்டோர் செய்தி வாசிப்பாளராக தங்கள் பணியை தொடங்கி, தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் முத்திரை பதித்தவர்கள். அவர்கள் வரிசையில் பிரியா பிரின்ஸ்-க்கும் தனி இடமுண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: