பிஸி ப்ரியா பவானி சங்கர்! 7 படங்களில் நடித்து வருகிறார்

ப்ரியா பவானி சங்கர்

கோலிவுட்டில் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர் தொடர்ந்து 7 படங்களில் நடித்து வருவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர் தற்போது 7 படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கடாரம் கொண்டான் படத்தை அடுத்து இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் விக்ரம். வயாகாம் மற்றும் செவன் ஸ்கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

க்ரைம் த்ரில்லர் பாணியில் அதிக பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்திலிருந்து தொடங்க இருக்கிறது.

READ ALSO: ஆக்ஷன், காமெடி கலவையில் ஜோதிகாவின் அடுத்த படம் ஜாக்பாட்!

இந்நிலையில் நடிகர் விக்ரமின் புதிய படத்தில் நடிப்பதற்கு, நடிகை ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.

விக்ரம் | பிரியா பவானி சங்கர்


ஏற்கனவே, அருண் விஜய்யுடன்  மாஃபியா, கமலுடன் இந்தியன் 2, அதர்வாவுடன் குருதி ஆட்டம், என ப்ரியா பவானி சங்கர் 7 திரைப்படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.

கோலிவுட்டில் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர் தொடர்ந்து 7 படங்களில் நடித்து வருவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also see...

'றெக்க மட்டும் இருந்தா.. தேவதை!' - ப்ரியா பவானி சங்கர் ஆல்பம்...

Published by:Vinothini Aandisamy
First published: