நடிகை ப்ரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக வலம் வரும் கதாநாயகிகளில் ஒருவர் என்று கூறலாம்.இவர் நடிப்பில் இதுவரை நான்கு படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தாலும், இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது என்று தான் கூற வேண்டும்.தற்போது அசோக் செல்வனுடன் இணைந்து ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.இந்த படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.
கடந்த ஆண்டு அசோக் செல்வன்,ரித்திகா சிங், வானி போஜன் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள படத்திலும் நடித்து வருகிறார் அஷோக் செல்வன்.
இந்நிலையில் படப்பிடிப்பின் போது சத்தீஷ் மற்றும் அஷோக் செல்வன் கேஷ்வல்லாக அமர்ந்திருப்பதை வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் ‘ ஷூட்டிங்கிற்கு நடுவில் இந்த வீடியோ எடுத்ததற்கு நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் ’என கிண்டல் அடித்து பதிவிட்டுள்ளார்.
இந்த படத்திற்கு இதுவரை பெயர் வைக்கப்படவில்லை. இதையடுத்து இந்த படம் மலையாள படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அஷோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர் இருவரும் அமேசான் ப்ரைமில் வெளியான ‘டைம் என்ன மாஸ்’ வெப் சீரிஸில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது