பிரபல காமெடி நடிகரின் மகனுக்கு ஜோடியான பிரபல சீரியல் நடிகை!

ப்ரீத்தி சர்மா

பூவே உனக்காக, அபியும் நானும், திருமகள், வானத்தை போல, கண்ணான கண்ணே உள்ளிட்ட சன் டிவி சீரியல்களில் கெஸ்ட் ரோலிலும் வந்து சென்றுள்ளார் நடிகை ப்ரீத்தி ஷர்மா.

  • Share this:
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சித்தி-2 சீரியலில் வெண்பா என்ற கேரக்டரில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் குறிப்பாக இளைகர்களிடம் பிரபலமாக இருப்பவர் நடிகை ப்ரீத்தி ஷர்மா. தென்னிந்திய தொலைக்காட்சி நடிகையான இவர் கடந்த 1999-ல் ஜனவரி 31 அன்று பிறந்தவர் ஆவார். குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். இவர் தமிழ் சின்னத்திரையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அனிதாவாக அறிமுகம் ஆனார்.

இதனைத் தொடர்ந்து சன் டிவியில் சித்தி–2 சீரியலில் நடிகர் நந்தன் லோகநாதனுக்கு (கவின் கேரக்டருக்கு) ஜோடியாக வெண்பா என்றார் கேரக்டரில் நடித்து இளம் ரசிகர்களை ஈர்த்துள்ளார். சித்தி-2 சீரியலில் இவர் கவின் சார் என்றழைக்கும் அழகிற்காகவே பலர் இவருக்கு தீவிர ரசிகர்களாக உள்ளனர். சீரியலில் இருந்து நடிகை ராதிக்கவே விலகி விட்ட நிலையிலும், குறிப்பிட்ட ரசிகர் வட்டத்தை கொண்டு ஹிட்டாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் காரணங்களில் நடிகை ப்ரீத்தி ஷர்மாவும் ஒருவர் என்றால் மிகையாகாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூவே உனக்காக, அபியும் நானும், திருமகள், வானத்தை போல, கண்ணான கண்ணே உள்ளிட்ட சன் டிவி சீரியல்களில் கெஸ்ட் ரோலிலும் வந்து சென்றுள்ளார் நடிகை ப்ரீத்தி ஷர்மா. பாடகரும், காமெடி நடிகருமான கருணாஸ் மற்றும் நடிகை, பாடகியான கிரேஸ் கருணாஸ் இவர்களின் மகன் கென் கருணாஸ். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த மற்றும் தேசிய விருது பெற்ற மெகா ஹிட் திரைப்படமான அசுரனில் நடிகர் தனுஷின் மகனாக சிதம்பரம் என்ற கேரக்டரில் திறம்பட நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றவர் கென் கருணாஸ். இவர் ஏற்கனவே ரகளபுரம், அழகு குட்டி செல்லம், இது காதல் வரும் பருவம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.



இந்நிலையில் கென் கருணாஸ் மற்றும் அவரது அம்மா கிரேஸ் ஆகியோர் இடம்பெறும் ‘வாடா ராசா’ என்ற மியூசிக்கல் ஆல்பம் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இதில் நடிகை ப்ரீத்தி ஷர்மாவும் இடம் பெற்றுள்ளார். இது தொடர்பான சமீபத்திய 2 நொடிகள் ஓடும் ப்ரமோ வீடியோவில் "வேட்டிய எடுத்து கட்டிக்கோ.. கெத்தா இருக்கும் பாத்துக்கோ".. என்ற வரிகளுடன் ப்ரமோ துவங்குகிறது. இதற்கு கென் கருணாஸ் உட்பட டான்ஸ் குழுவினர் நடனமாடும் காட்சியும், கூடவே 'புடவையை எடுத்து கட்டிக்கோ நல்லா இருக்கும் பாத்துக்கோ' என்ற பாடல் வரிகள் வரும் போது நடிகை ப்ரீத்தி ஷர்மா அழகாக டான்ஸ் ஆடுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.



ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் கென் கருணாஸ், கிரேஸ் கருணாஸ் மற்றும் ப்ரீத்தி ஷர்மா நடித்துள்ள இந்த ஆல்பம் சோனி லேபிளுக்காக தி ரூட் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு, சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: