Home /News /entertainment /

‘மாஸ்டர்’ பாடலுக்கு நடிகை பிரகதி ஆடிய குத்து டான்ஸ் - வீடியோ

‘மாஸ்டர்’ பாடலுக்கு நடிகை பிரகதி ஆடிய குத்து டான்ஸ் - வீடியோ

மாஸ்டர்

மாஸ்டர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நடிகை பிரகதி தனது மகனுடன் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அதை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

    விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.

    இவர்களுடன் அர்ஜுன் தாஸ், ஆன்ட்ரியா, கவுரி கிஷான், தீனா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் டீசர் மற்றும் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் நடிகை பிரகதி தனது மகனுடன் மாஸ்டர் பாடலுக்கு குத்து டான்ஸ் ஆடி அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    1994-ம் ஆண்டு வெளியான வீட்ல விசேசங்க படத்தில் நடித்திருந்த நடிகை பிரகதி, ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். படங்கள் மட்டுமின்றி அரண்மனைக் கிளி உள்ளிட்ட தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் பிரகதி நடித்து வருகிறார்.



     




    View this post on Instagram




     

    Quarantine tales #vaathicoming #mothersonduo #master💕❤🤪🤪 HAPPY EASTER🤩😍🤩


    A post shared by Mahavadi Pragathi (@pragstrong) on






    மேலும் படிக்க: கொரோனா எதிரொலி : மகனை நினைத்து மனவருத்தத்தில் விஜய்?
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Master

    அடுத்த செய்தி