• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • 45 வயதில் வியர்வை சிந்த உடற்பயிற்சி செய்யும் நடிகை பிரகதி - நெகடிவ் விமர்சனங்களுக்கு பதிலடி!

45 வயதில் வியர்வை சிந்த உடற்பயிற்சி செய்யும் நடிகை பிரகதி - நெகடிவ் விமர்சனங்களுக்கு பதிலடி!

நடிகை பிரகதி

நடிகை பிரகதி

தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார் நடிகை பிரகதி.அது மட்டுமில்லாமல் சீரியலிலும் கலக்கி வருகிறார்.இவர் அடிக்கடி தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.அதற்கு வந்த நெகடிவ் கமெண்ட்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

 • Share this:
  நடிகை பிரகதி 1994ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் “வீட்ல விசேஷங்க” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு, நடிகை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்துடன் “பெரிய மருது”, பாண்டியராஜனுடன் “சும்மா இருங்க மச்சன்”உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  சமீபத்திய நாட்களில், அவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனின் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். உதயநிதியின் “கெத்து”, சசி குமாரின் “தார தப்பட்டை”, சந்தானத்தின் “இனிமே இப்படித்தான்” ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே சமீப காலமாக சமூக வலைத்தளங்களிலும் அக்டிவாக இருக்கிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார்.

  மேலும் அவர் தான் வேலை செய்வது, உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார். இதனால் நாளுக்கு நாள் இவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. தற்போது ஏறக்குறைய 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின்தொடர்ந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மகனுடன் வாத்தி கம்மிங் என்ற விஜய் பட பாடலுக்கு நடனமாடி ஷேர் செய்திருந்த வீடியோ வைரலானது.

  Also Read:ஆயுத எழுத்து சீரியல் ஆனந்த் செல்வன் நினைவிருக்கிறதா? இவரின் அடுத்த சீரியல் இதுதான்!

  இந்த நிலையில் கடந்த திங்களன்று, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டிரெட்மில்லில் புஷ்ஷப் எடுக்கும் ஒர்க்அவுட் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருந்தார். "சில நேரங்களில் நீங்கள் அனைத்து ஒர்க்அவுட்டுகளையும் கற்று கொள்ள வேண்டும்" என தலைப்பிட்டு வியர்வை சிந்த உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ஷேர் செய்திருந்தார்.   
  View this post on Instagram

   

  A post shared by Pragathi Mahavadi (@pragstrong)

  இந்த போஸ்டிற்கு ஏராளமானோர் லைக் செய்திருந்த நிலையில், சில எதிர்மறையான கமெண்டுகளும் வர தொடங்கியது. ஒரு யூசர், இப்படி உடற்பயிற்சி செய்தும் உங்கள் எடை ஏன் குறையவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரகதி, “நான் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்யவில்லை, நான் வலுவாக இருக்க விரும்புகிறேன்” என்றார்.

  Also Read  :  கருங்காப்பியம்-சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்ட கதையில் காஜல் அகர்வால்..

  ஸ்னைப் ஸ்னாப்ஸிப் என்ற மற்றொரு யூசர் ஒருவர், இதனை நீங்கள் ஏன் ஆண்டி செய்கிறீர்கள்? இப்படி செய்வதன் மூலம் நீங்கள் கதாநாயகியாக போவதில்லை, இதை நீங்கள் முன்பு செய்திருந்தால், நடிகை ஸ்ரீதேவி போன்ற நட்சத்திரமாக மாறியிருப்பீர்கள் என கமெண்ட் செய்தார். அவருக்கு பதிலளித்த பிரகதி, “நான் இதை கதாநாயகியாகவோ அல்லது என் வயதை குறைக்கவோ செய்யவில்லை, இது எனது உடல்நலம் மற்றும் ஆர்வத்திற்காக செய்வது” என்று கூறினார்.

  Also Read  :  மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிய உதயநிதி-வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

  ஒரு யூசர் பெண்ணியத்தை காட்ட வேண்டாம் என்று கமெண்ட் கமெண்ட் செய்த நிலையில், அதனை பார்த்து கடுப்பான பிரகதி, இந்த பிரச்சினையில் பெண்ணிய அணுகுமுறை எங்கிருந்து வந்தது? நீங்கள் ஏன் என் இன்ஸ்டாகிராமில் வெளியேறவில்லை? இதுபோன்ற பயனற்ற எதிர்மறை நபர்களை நான் விரும்பவில்லை என்று பதிலளித்துள்ளார். நடிகை பிரகதியின் தைரியமான கமெண்ட்ஸ்களை பலரும் விரும்பியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: