பிக்பாஸ்: ஐஸ்வர்யா பற்றி முதன்முறையாக ட்வீட் போட்ட ஓவியா!

news18
Updated: September 12, 2018, 7:41 PM IST
பிக்பாஸ்: ஐஸ்வர்யா பற்றி முதன்முறையாக ட்வீட் போட்ட ஓவியா!
ஓவியா | ஐஸ்வர்யா
news18
Updated: September 12, 2018, 7:41 PM IST
பிக்பாஸ் போட்டியாளர் ஐஸ்வர்யா குறித்து நடிகை ஓவியா ட்வீட் செய்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைசியாக நடிகர் சென்ராயன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இருந்தார்.

இந்த வார எலிமினேஷனில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, மும்தாஜ், ரித்விகா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரத்தில் பிக்பாஸ் முதல் சீசனில் இடம்பெற்றவர்கள் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். மேலும் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐஸ்வர்யா எப்போது வெளியேறுவார் என்று ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா என்ற அவரது பெயரை மட்டும் ட்வீட் செய்துள்ளார். மீதியை அவரது ரசிகர்கள் இஷ்டத்திற்கு நிரப்பி வருகின்றனர்.

Loading...
ஓவியாவின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், ஐஸ்வர்யாவை வெளியேற்றுமாறு ஓவியாவே சொல்லிட்டாங்க என்று ஐஸ்வர்யா எதிர்ப்பாளர்களும், ஐஸ்வர்யா பெயரை மட்டும் அவர் குறிப்பிட்டிருப்பதால் அவருக்கு ஓட்டு போட சொல்வதாகவும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த சர்ச்சையை ஓவியாவே முடித்துவைக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்