ஓவியாவின் காதல் பதிவு? லவ்வர் இவர் தானா?

ஓவியாவின் காதல் பதிவு? லவ்வர் இவர் தானா?

ஓவியா

ஓவியாவின் காதல் பதிவு ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

  • Share this:
‘களவாணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஓவியா. தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

திரைப்படங்களால் பெற்ற புகழை விட இந்நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்டார் ஓவியா. தனது வெளிப்படையான நடவடிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் இடம்பிடித்த ஓவியா, ஆரவ்வை காதலிப்பதாக நிகழ்ச்சியிலேயே தெரிவித்தார்.

ஆனால் ஓவியாவின் காதலை ஏற்க மறுத்த ஆரவ் அவருடன் நிகழ்ச்சிக்குப் பின்னரும் நட்பு பாராட்டி வந்தார். பிறந்தநாள் கொண்டாட்டங்கள், சுற்றுலா செல்வது என சுற்றித் திரிந்த ஆர்வ் - ஓவியா பற்றி காதல் வதந்திகளும் சுற்றின. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் ஆரவ், ‘ஜோஷ்வா: இமைபோல் காக்க’ படத்தின் ஹீரோயின் ராஹேவை 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தில் ஆர்வ் உடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் ஓவியா மட்டும் கலந்து கொள்ளவில்லை. ஒரு சில மாதங்களுக்குப் ஆரவ் திருமணம் பற்றிய ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஓவியா, ஆரவ்வின் திருமணத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்போது நான் கேரளாவில் இருந்ததால் தான், திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. எங்கள் இருவருக்குள் என்ன இருந்ததோ அது முடிந்துவிட்டது. இப்போது அவருக்கென ஒரு அழகான வாழ்க்கை அமைந்திருக்கிறது. இனி மீண்டும் அதைப்பற்றி கேட்காதீர்கள்” என்று கூறியிருந்தார்.இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ‘லவ்’என தலைப்பிட்டு ஆண் ஒருவரின் தலையில் முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் இவர் தான் காதலரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் ஓவியாவின் பதிவுக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
Published by:Sheik Hanifah
First published: