முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஈடுசெய்ய முடியாத இழப்பு... நடிகை நிஷா உருக்கம்

ஈடுசெய்ய முடியாத இழப்பு... நடிகை நிஷா உருக்கம்

நடிகை நிஷா

நடிகை நிஷா

நடிகை நிஷா தனது பாட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்து உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

பிரபல டிவி சீரியல் நடிகை நிஷா தனது பாட்டி உடல்நல குறைவால் உயிரிழந்தார் என்றும் அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளார்.

விஜய், சன் மற்றும் ஜீ டிவி சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நிஷா. சின்னத்திரையில் நடித்து மிகவும் பிரபலமான இவர் பல சினிமாவிலும் நடித்துள்ளார். இவன் வேறமாதிரி, நான் சிகப்பு மனிதன், என்ன சத்தம் இந்த நேரம், சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, வில் அம்பு ஆகிய திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

சீரியல் நடிகையான இவர் திரைப்பட நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்து கொண்டார். சீரியலில் பிஷியாக இருக்கும் நிஷா சமூக வலைத்தளங்கில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இந்நிலையில் நடிகை நிஷா தனது பாட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்து உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Nisha Ganesh (@prettysunshine28)அதில், என் வாழ்வில் ஈடு இணை இல்லாத ஒருவரை நான் இழந்துவிட்டேன். என்னுடைய கமலா பாட்டி நன்றாக சமைப்பவர், உறுதுணையாக இருப்பார், நல்ல ஆசான், சிறந்த தோழி. உங்கள் இழப்பை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது. உங்கள் ஆன்மா சாந்திடையத்தும்“ என்றுள்ளார்.

First published:

Tags: Entertainment