Home /News /entertainment /

மாடியில் இருந்து விழுந்த பிரபல நடிகை மரணம்!

மாடியில் இருந்து விழுந்த பிரபல நடிகை மரணம்!

நடிகை - நிகிதா

நடிகை - நிகிதா

சோரி சோரி மான சோரி, மா ரா பனடாகினி, ஸ்மைல் பிளீஸ், உள்ளிட்ட ஒடியா மொழி படங்களிலும், பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை நிகிதா. இவரது இயற்பெயர் லக்‌ஷ்மி பிரியா பெஹரா.

  • News18
  • Last Updated :
ஒடியா மொழி மற்றும் தொலைக்காட்சித் தொடர் நடிகையான நிகிதா மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்து பலியானார். அவருக்கு வயது32.

சோரி சோரி மான சோரி, மா ரா பனடாகினி, ஸ்மைல் பிளீஸ், உள்ளிட்ட ஒடியா மொழி படங்களிலும், பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை நிகிதா.

இவரது இயற்பெயர் லக்‌ஷ்மி பிரியா பெஹரா. கடந்த 2016-ம் ஆண்டு கோபால்பூரைச் சேர்ந்த லிபான் சஹு என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெற்று 6 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.

மஹாநதி விஹாரில் உள்ள தனது பெற்றோருடன் வசிந்து வந்த நடிகை நிகிதா, கடந்த வெள்ளிக்கிழமையன்று வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, உறவினர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பின்னர் எஸ்.சி.பி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி நிகிதா உயிரிழந்துள்ளார். அவரது மரணம் குறித்து மார்க்கெட் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவரது மரணம் சந்தேகத்திற்கிடமான முறையில் நிகழ்ந்திருப்பதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் இறப்பு குறித்த முழு விவரம் தெரியவரும் என்று அறியப்படுகிறது.

ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் தினகரன் குடும்பத்தினர்தான் - சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

Published by:Sheik Hanifah
First published:

Tags: Odisa

அடுத்த செய்தி