யார்க்கர் கிங் நடராஜனை பாராட்டிய நயன்தாரா..

யார்க்கர் கிங் நடராஜனை பாராட்டிய நயன்தாரா..

நயன்தாரா | கிரிக்கெட் வீரர் நடராஜன்

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு நடிகை நயன்தாரா பாராட்டு தெரிவித்துள்ளார்

  • Share this:
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன். இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை கதையாக உருவாக்கி கன்னியாகுமரி மற்றும் சென்னையில் படமாக்கியுள்ளது படக்குழு.

தீபாவளிக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்து வீடியோ பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, “’மூக்குத்தி அம்மன்’ தீபாவளி அன்று ரிலீசாக உள்ளது. நான் இந்த படத்திற்காக ரொம்ப ஆவலாக காத்திருக்கிறேன். நான் மட்டுமன்றி என்னுடைய குடும்பமும் என்னுடைய ஊர் பொதுமக்களும் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

ஆர்.ஜே.பாலாஜியின் கமெண்டிரிக்கு எங்கள் ஊர் மக்கள் ரசிகர்களாகிவிட்டனர். அவருடைய வர்ணனை மிக நன்றாக இருந்தது. எனவே அந்தப் படத்திற்காக நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.

மூக்குத்தி அம்மன் படத்தை விளம்பரம் செய்த நடராஜனை நயன்தாரா பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, உங்களது பயணத்துக்கு வாழ்த்துகள். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு வாழ்த்துகள். நீங்களும் உங்களது குடும்பமும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தைக் காண ஆவலாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

யார்க்கர் மன்னன் நடராஜன்.. யார் இவர்?

கிரிக்கெட் உலகில் பேட்ஸ்மேன்கள் ஒரு ஓவர் ஆறு பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிடுவதும், பவுலர்கள் ஒரு ஓவர் ஆறு பந்துகளையும் யார்க்கராக வீசுவதும் அசாத்தியமானது. இதை நிகழ்த்திக்காட்டியிருக்கிறார் சேலம் சின்னப்பம் பட்டியிலிருந்து கிளம்பிய யார்க்கர் மன்னன் நடராஜன்.

உலக வரைபடத்தில் அடையாளப்படுத்தாத கடைகோடி கிராமத்திலிருந்து கிளம்பி சர்வதேச கிரிக்கெட் உலகில் தனது பெயரை உறக்கச்சொல்லியிருக்கிறார் நடராஜன். 2017-ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தாலும் 2020-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் தனது துல்லியமான யார்க்கர் பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

உள்ளூரில் நடக்கும் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு, தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மூலம் வெளியுலகிற்கு தெரிய ஆரம்பித்தார். அன்றாட கூலி வேலைக்கு செல்லும் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்த நடராஜன் மீது பொறுப்புகள் அதிகமாகவே இருந்தது. மூன்று தங்கை, ஒரு தம்பி, குடும்பத்தில் மூத்த மகன் என  அனைவரையும் வாழ்க்கையில் கறைசேர்க்க விளையாடிய விளையாட்டு தான் கிரிக்கெட் .

தான் தேர்ந்தெடுத்த விளையாட்டில் நண்பர் ஜெயபிரகாஷ் உதவியுடன் விடா முயற்சியால் வளர்ந்துவரும் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார். 2017-ஆம் ஆண்டு நடராஜனின் பந்துவீச்சை அடையாளம் கண்ட சேவாக், பஞ்சாப் அணிக்கு 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். வாய்ப்புகள் கிடைத்தாலும் காயம், பந்துவீச்சில் புகார் என ஒருவருடம் கிரிக்கெட் வாழ்க்கை சோகமானதாக மாறியது. விடாது முயற்சித்த நடராஜன் மீண்டு வந்து நடப்பு தொடரில் ஹைதராபாத் அணிக்காக அசத்தி வருகிறார்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை தனது துள்ளியமான பந்துவீச்சால் மிரட்டினார். அஸ்வினுடனான உரையாடலில் தனது கனவு விக்கெட் தோனி என குறிப்பிட்டு அதையும் நிறைவேற்றியினார் நடராஜன்.

இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 29 யார்க்கர்களை தெரிக்கவிட்டு, 9 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். இதில் விராட், தோனி விக்கெட் ஸ்பெஷல். மேலும் ஒரு ஓவரில் அனைத்து பந்தையும் யார்க்கராக வீசி சர்வதேச வீரர்களுக்கு சவால் விட்டு வருகிறார். இவரது திறமையை பார்த்து வியந்த வேகப்பந்து ஜாம்பவான் பிரட்லி புகழாரம் சூட்டியுள்ளார்.

தடைகளை தாண்டி தான் தேர்ந்தெடுத்த விளையாட்டில் சாதித்து வரும் நடராஜன் தன்னைப்போல் ஏழ்மையில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு தன் கிராமத்தில் தனியாக பயிற்சி மையம் ஆரம்பித்து பயிற்சி வழங்கிவருகிறார். அதற்கு சான்றுதான்  டி.என்.பி.எல்  Highest Wicket Taker பெரியசாமி.


தனது விடா முயற்சியாலும், திறமையாலும் உலக வரைபடத்தில் தனது கிராமத்தின் பெயரை தேட வைத்த சேலம் சின்னப்பம்பட்டி நடராஜன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் இடம்பெற்று இந்திய அணிக்காக விளையாட உள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: