சினிமா தொழிலாளர்களுக்கு அள்ளிக் கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார்!

நயன்தாரா

 • Share this:
  படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சினிமாதொழிலாளர்களுக்கு நயன்தாரா ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.

  கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து திரைப்படம், சீரியல், விளம்பரங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பெஃப்சி அமைப்பில் உள்ள 15 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில் அவர்களுக்கு முன்னணி நடிகர்கள் உதவ முன்வர வேண்டும் என்று பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார்.

  இந்த கோரிக்கையை ஏற்று ரஜினிகாந்த் ரூ. 50 லட்சம், தனுஷ் ரூ. 15 லட்சம், சூர்யா, கார்த்தி, சிவக்குமார் குடும்பத்தினர் ரூ. 10 லட்சம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் தலா ரூ. 10 லட்சம் கொடுத்தும் இன்னும் சிலர் அரிசி மூட்டைகள் கொடுத்தும் உதவினர். அந்த வரிசையில் தற்போது நடிகை நயன்தாராவும் இணைந்துள்ளார். தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.20 லட்சம் வழங்குவதாக நயன்தாரா அறிவித்துள்ளார்.

  இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் பெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, “திரைப்படத் தொழிலாளர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் கை கொடுத்து உதவிய நல்ல இதயம் கொண்ட சகோதரி நடிகை நயன்தாராவுக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க: தள்ளிப்போகும் உச்ச நட்சத்திரங்களின் படங்கள்... ஆட்டம் காணும் தமிழ்ப் படங்களின் வர்த்தகம்
  Published by:Sheik Hanifah
  First published: