ஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்!

நயன்தாரா - சோனம் கபூர்
- News18
- Last Updated: November 17, 2019, 8:06 PM IST
கொரியன் படமான ‘பிளைண்ட்’(blind) பட ரீமேக்கில் நயன்தாராவும், சோனம் கபூரும் நடிக்கின்றனர்.
2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘பிளைண்ட்’. க்ரைம் த்ரில்லரான இந்தப் படத்தை ஆங் சா வூன் இயக்கினார். விபத்தில் கண்பார்வையை இழந்த பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் கொரியா மட்டுமின்றி உலகெங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து சீனா, ஜப்பான் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
தமிழில் இந்தப் படம் நெற்றிக்கண் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியில் ரீமேக் செய்யப்படும் பிளைண்ட் படத்தில் நாயகியாக சோனம் கபூர் நடிக்கிறார். கஹானி திரைப்படத்தை இயக்கிய சுஜோய் கோஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஷோமி மகிஜா இயக்குகிறார். சோனம் கபூர் கடைசியாக நடித்த ‘தி ஜோயா ஃபேக்டர்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தன்னை நிரூபிக்க முடிவெடுத்துள்ளார் சோனம் கபூர்.
Also see:
2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘பிளைண்ட்’. க்ரைம் த்ரில்லரான இந்தப் படத்தை ஆங் சா வூன் இயக்கினார். விபத்தில் கண்பார்வையை இழந்த பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் கொரியா மட்டுமின்றி உலகெங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து சீனா, ஜப்பான் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
தமிழில் இந்தப் படம் நெற்றிக்கண் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது.
Also see: