ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்!

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்!

ரஜினிகாந்த்| ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினிகாந்த்| ஏ.ஆர்.முருகதாஸ்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் த்ரிஷா நடித்திருந்தனர். இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இது ரஜினிகாந்தின் 166-வது படம். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும், சமூக ஆர்வலராகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தில் மட்டுமே ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். பேட்ட படத்தை அடுத்து இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இந்தநிலையில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷிடம் படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. படப்பிடிப்பு மார்ச் மாதம் இறுதிக்குள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

சென்னை நட்சத்திர ஹோட்டல்களில் எல்லை மீறும் போதை பழக்கம் - வீடியோ

First published:

Tags: AR Murugadoss, Rajinikanth