தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதமா? - நமீதாவின் கணவர் விளக்கம்

தனது கணவருடன் நடிகை நமீதா

அதிகாரிகள் காரை சோதனையிட முயன்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை நமீதா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தனது காரை சோதனையிட முயன்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் நடிகை நமீதா வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ளார் அவரது கணவர்.

  மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இதைத்தொடர்ந்து சேலம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அப்பகுதி வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தியுள்ளனர். அதில் நடிகை நமீதா அவரது கணவருடன் இருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து அதிகாரிகள் காரை சோதனையிட முயன்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை நமீதா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் என்னை சோதிக்க பெண் போலீஸ் வந்தால் மட்டுமே சோதனைக்கு அனுமதிக்க முடியும் என்று நமீதா தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

  இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் நடிகை நமீதாவின் கணவர், கடந்த சில நாட்களாக செய்திகளில் வெளியாகும் தகவலால் நீங்கள் நமீதாவை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். என் மீதும் எனது மனைவி நமீதா மீதும் இருக்கும் நியாயத்தை எடுத்துக் கூற விரும்புகிறேன்.



  நாங்கள் ஏற்காடுக்கு படப்பிடிப்புக்கு சென்று கொண்டிருந்தோம். 8 மணி நேரத்துக்கும் அதிகமாக பயணித்ததால் சோர்வடைந்து எனது மனைவி காரின் பின் இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்தார். வழியெங்கும் 3 முறை எங்களது வாகனம் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

  பின்னர் சேலம் - ஏற்காடு பகுதியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் எங்களது வாகனத்தை நிறுத்தி கடுமையாக பேசினர். கிரிமினல்கள் போல் எங்களை நடத்தினர்.
  எனது மனைவி பின் இருக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதாக கூறியும் அதிகாரி ஒருவர் பின்பக்க கதவைத் திறந்தார். அப்போது என் மனைவி கிட்டத்தட்ட கீழே விழப்பார்த்தார். அதற்காக அந்த அதிகாரி எங்களிடம் மன்னிப்பு கோரினார். ஆனால் காரை சோதனை செய்தார். எனது மனைவியின் ஹேண்ட் பேக்கை சோதனை செய்ய வேண்டும் என்றார்.

  ஹேண்ட் பேக்கை சோதனையிட வேண்டுமென்றால் பெண் போலீசை கூப்பிடுங்கள். சில பெர்சனல் பொருட்களை அதில் வைத்திருக்கிறேன் என்றார். இதுதான் விஷயம். ஆனால் இதை ஊதிப் பெரிதாக்கிவிட்டார்கள். நமீதா ஒரு நடிகை என்பதால் இது ஒரு பெரிய விஷயமாக்கப்படுகிறது.

  இதுவே ஒரு சாதாரண பெண் செய்திருந்தால் பெரிய செய்தியாக மாறியிருக்காது. இந்த சம்பவத்திலிருந்து பெண்கள் தங்களுக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலைவரும் போது பெண் போலீஸை அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

  தேர்தல் வருது பாடல் சாமானியர்களுக்கானது -டி.இமான் பேட்டி

  Published by:Sheik Hanifah
  First published: