நமீதா கிணற்றுக்குள் விழுவதைப் பார்த்து பதறிப்போன மக்கள்

நடிகை நமீதா

நமீதா கிணற்றுக்குள் விழுவதைப் பார்த்த மக்கள் பதறிப்போய் அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர்.

  • Share this:
நடிகர் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் நமீதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்ட நமீதா பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா பதவியேற்ற பின்னர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அவ்வப்போது அரசியல் நிகழ்ச்சிகளில் தலைகாட்டும் நமீதா ‘பவ் வவ்’ என்ற படத்தை தயாரித்து அதில் முக்கிய கேரக்டரில் நடித்தும் வருகிறார். ஆர்.எல்.ரவி, மேத்யூ இணைந்து இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரம் அருகே உள்ள காடுகளில் நடைபெற்று வந்தது.

அப்போது படப்பிடிப்பைப் பார்க்க அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். கையில் செல்போனுடன் நடந்து சென்ற நமீதா மொபைல் அருகிலிருந்து கிணற்றுக்குள் விழுந்ததால் அதை தாவிப்பிடிக்க முயன்று தானும் கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதைப்பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள் பதறிப்போய் அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் படக்குழுவினர் அவர்களை தடுத்து நிறுத்தி ஷூட்டிங் நடைபெறுவதாகக் கூறினர். படப்பிடிப்பு நடைபெறுவதை அறியாத மக்கள் அக்கம் பக்கத்திலும் நமீதா கிணற்றுக்குள் விழுந்ததாகவே தகவல் பரப்பியுள்ளனர்.

படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நமீதா, தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவாரா அல்லது நட்சத்திர பேச்சாளராக தீவிர பிரசாரம் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: