செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நக்ஷத்ரா, ‘வாணி ராணி’ சீரியலில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே, நாயகி உள்ளிட்ட சீரியல்களில் நடித்த இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘திருமகள்’ சீரியலிலும் நடித்துள்ளார்.
சீரியல்கள் மட்டுமல்லாது மிஸ்டர் லோக்கல், இரும்புகுதிரை, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நக்ஷத்ரா நடித்துள்ளார். இந்நிலையில் தனது காதலரைப் பற்றிய அறிவிப்பை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி இன்ஸ்டாகிராமில் அவர் எழுதியிருப்பதாவது, “நான் இன்ஸ்டாகிராமிற்கு வந்த போது நண்பர்கள் மட்டும் தான். ஆனால் நடிப்பு தொழில் என நான் ஈடுபட்டபோது ரசிகர்கள் நீங்கள் எல்லோரும் என் சிறிய உலகத்தில் ஒரு பகுதியாக இருந்தீர்கள். நாளுக்கு நாள் நீங்கள் எனக்குக் கொடுக்கும் அன்பு வளர்ந்து கொண்டே வருகிறது. அது தான் என்னுடைய பலம்.
உங்களிடம் முக்கியமான ஒரு நபரை அறிமுகப்படுத்த இருக்கிறேன்” என்று கூறியிருந்த நக்ஷத்ரா தனது அடுத்த பதிவில் இவர் தான் அவர் எனக் குறிப்பிட்டு தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். காதலரின் பெயரின் ராகவ் என்றும் கூறப்படுகிறது. அதை சுருக்கமாக ராகா என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் நக்ஷத்ரா.